12 இலட்சத்திற்கு குறைவான வருமானம் பெறுபவர்களா நீங்கள்.? இதோ உங்களுக்கு மகிழ்சிகரமான செய்தி

Published By: Robert

23 Aug, 2017 | 10:05 AM
image

Image result for  வருமானம்

12 இலட்சம் ரூபா­வுக்கு  குறை­வான வரு­மானம் பெறு­பவர்களை வரு­மான வரி செலுத்­து­தலில் இருந்து விடு­விக்­கவும் வரிய மக்­களை மறை­முக வறியில் இருந்து மீட்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக  நிதி மற்றும்  ஊட­கத்­துறை  அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­துக்­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார் இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது.

நாட்டின் வரு­மா­னங்­களில் வரி வரு­மானம் முக்­கிய பங்­கினை வகிக்­கின்­றது. நாட்டில் வரி அற­வீட்டு முறைகள் பல  இருந்த போதிலும் அதி­கப்­ப­டி­யான வரி சுமை வறிய மக்­க­ளையே தாக்கம் செலுத்­து­கின்­றது. அந்த வகையில் நாட்டின்  மொத்த செலவை ஈடு செய்­வ­தற்­காக 80% சுமையை தாங்­கு­வது மறை­முக வரி­செ­லுத்தும் வறிய மக்­களே வியா­பா­ரிகள், வைத்­தியர் வழக்­க­றி­ஞர்கள் போன்றோர் பொருட்­களை கொள்­வ­னவு செய்யும் போது செலுத்தும் மறை­முக வரியை போன்றே வறிய மக்­களும் செலுத்­து­கின்­றனர். 

அந்த வகையில் நாட்டின் மொத்த செலவில் பெரும் பங்­கினை அன்­றாட வாழ்­வா­தா­ரத்தை கொண்டு செல்ல கூடிய வரு­மானம் இல்­லாத வறிய மக்கள் சுமக்­கின்­றனர். எனவே இம்­மு­றைமை மாற்­றி­ய­மைக்கப்பட வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும்.  இதனை கருத்தில் கொண்டு நேரடி வரியை அதி­க­ரித்து வறிய மக்­க­ளுக்கு அதி­க­மாக சுமத்­தப்­படும் மறை­முக வரி சுமையை குறைப்­பதே நிதி­ய­மைச்சின் எதிர்­பார்ப்­பாகும்.

இதன்படி 80 - 20 ஆக உள்ள வரி அற­வீட்டு விகி­தா­சா­ரத்தை எதிர்­வரும் காலத்தில் 60- 40 ஆக குறைக்க நாம் எதிர்­பார்த்­துள்ளோம்.இதனை இலக்­காக கொண்டே புதிய தேசிய வரு­மான வரி சட்­ட­மூ­லத்தை எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்ளோம்.

சாதா­ரண மக்­களின் பொரு­ளா­தார சிக்­கலை குறைக்கும் நோக்கில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள இவ் வரு­மான வரி சட்­ட­மூ­லத்தின் ஊடாக மறை­முக வரி செலுத்­து­தலில் இருந்து வறிய மக்­களை மீட்­ப­தற்கு எதிர்­பார்க்­கிறோம்.

ஆகையால் தேசிய வரு­மான வரி சட்­ட­மூ­லத்­திற்கு அமை­வாக  இது குறித்த ஆரம்ப சட்­ட­மூ­லத்தை கடந்த சில மாதங்­க­ளாக ஆழ­மாக ஆராய்ந்து உயர் நீதி­மன்­றத்தால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட திருத்­தங்­களை உள்­ள­டக்கி  மேலும் 111 க்கும் அதி­க­மான திருத்­தங்­க­ளுடன் புதிய வருமான வரி சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன் ஊடாக நாட்டில் 12 இலட்சத்திற்கு குறைவான வருமானம் பெருபவர்கள் வருமான வரி செலுத்தவேண்டி ஏற்படாது என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57