இந்­தி­யா­வுடன் பொருளாதார உடன்­ப­டிக்கை செய்தால் மக்­களை திரட்டி வீதி­யி­லி­றங்கி போரா­டுவோம்

Published By: Robert

25 Jan, 2016 | 09:08 AM
image

இலங்கை இந்­திய நாடு­க­ளுக்கிடையில் சீபா­வுக்கு பதி­லான பொரு­ளா­தார தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கையில் பெப்­ர­வரி மாதம் இர­க­சி­ய­மாக அர­சாங்கம் கைச்­சாத்­தி­ட­வுள்­ளது. உடன்­ப­டிக்கை தொடர்­பி­லான திட்ட வரை­பை­கூட இந்­திய தூதுக் குழு­வி­ன­ரிடம் இலங்கை அர­சாங்கம் முன்­வைத்­துள்­ளது என மக்கள் விடு­தலை முன்­னணி குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

இர­க­சி­ய­மாக இவர்கள் செய்யும் இந்த மோச­டி­களை நிறுத்­தா­விடின் அனைத்து தொழில் சங்­கங்­க­ளையும் பொது­மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து அர­சாங்­கத்­திற்கு எதி­ராக போரா­ட­வேண்­டிய நிலைமை ஏற்­படும் எனவும் ஜே.வி.பி தெரி­வித்­தது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே ஜே.வி.பி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கைக்கு மிகவும் நெருக்­க­டி­யான பொரு­ளா­தார தொழில்­நுட்ப உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­தாக அண்­மையில் அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தெரி­வித்­துள்­ளது.

முன்னர் கொண்­டு­வ­ரப்­பட்ட சீபா உன்­ப­டிக்கை தொடர்பில் பத்து வரு­டங்­க­ளுக்கு மேலாக மாறு­பட்ட கருத்­துகள் உள்­ளன. இலங்­கையில் முத­லீட்­ட­ளர்கள் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக முரண்­பட்டு கருத்­து­க­ளையே வைத்­துள்­ளனர். அதேபோல் இலங்­கையில் முன்­னைய இரு ஜனா­தி­ப­தி­களும் இந்த உடன்­ப­டிக்­கையை தவிர்த்து வந்­துள்­ளனர். சந்­தி­ரிகா குமா­ர­துங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகிய இரு­வரும் இந்த உடன்­ப­டிக்­கையை மேற்­கொள்­ளாது தவிர்த்து வந்­துள்­ளனர்.

அவ்­வாறு இருக்­கையில் இப்­போது மைத்­திரி - ரணில் அர­சாங்கம் இந்த சீபா­வுக்கு பதி­லாக பொரு­ளா­தார தொழில்­நுட்ப உடன்­ப­டிக்­கையில் இந்­தி­யா­வுடன் கைச்­சாத்­திட தீர்­மா­னித்­துள்­ள­தாக வெளி­நாட்டு வர்த்­தக ஊக்­கு­விப்பி அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம தெரி­வித்­துள்ளார். அந்த விபரம் தொடர்­பி­லான ஆவ­ணத்­தையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ளார். இந்­தியா இந்த விட­யத்தில் அக்­கறை காட்­டு­கின்­றது, இந்­திய வியா­பார நிறு­வனம் ஆவ­லுடன் இருப்­பதும் எமக்கு தெரியும். ஆனால் இலங்­கையில் யாரு­டைய வேண்­டு­கோ­ளுக்கு அமைய இந்த உடன்­ப­டிக்­கையை செய்­ய­வுள்­ளனர் என்ற கேள்வி எழு­கின்­றது.

அதா­வது இந்த இந்­திய இலங்கை பொரு­ளா­தார உடன்­ப­டிக்கை எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் கைச்­சாத்­தி­ட­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக பொரு­ளா­தார மற்றும் தொழி­நுட்ப ஏற்­பா­டு­களை இந்த உடன்­ப­டிக்­கையை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதேபோல் இந்த உடன்­ப­டிக்கை தொடர்­பி­லான திட்ட வரைபை இந்­திய தூதுக் குழு­வி­ன­ரிடம் இலங்கை அர­சாங்கம் முன்­வைத்­துள்­ளது.

இலங்­கையின் இந்த வரைபை ஆராய்ந்து விரைவில் இந்­திய அரசு நட­வைக்கை எடுக்கும் எனவும் இந்த விடயம் தொடர்­பி­லான முழு­மை­யான உடன்­ப­டிக்கை இந்த ஆண்டு நடுப்­ப­கு­தியில் கைச்­சாத்­தி­டப்­படும் என தெரி­விக்­க­பட்­டுள்­ளது. ஆனால் இலங்­கையில் எவ­ரி­டமும் இந்த திட்ட வரை­புகள் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

ஆகவே பாரா­ளு­மன்­றத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆரா­யாது, இலங்­கையில் பொரு­ளா­தார வர்த்­தக நிபு­ணர்­களின் ஆலோ­சனை இல்­லாது குறிப்­பாக மக்கள் வரம் இல்­லாது இவ்­வா­றான உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட இலங்கை அர­சாங்­கத்­திற்கு அதி­காரம் இல்லை. முதலில் மக்­க­ளையும் பொரு­ளா­தார, வர்த்­த­கர்­க­ளையும் தெளி­வு­ப­டுத்த வேண்டும். அதேபோல் இந்த விடயம் இலங்­கையை எவ்­வாறு பாதிக்கும் என்­பதை முதலில் ஆராய வேண்டும். இலங்கை சர்­வ­தேச பொரு­ளா­தார நட­வைக்­கை­களை கையாள வேண்டும். அதேபோல் இலங்­கையில் பொரு­ளா­தார நலன்­க­ளையும் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும்.

இந்­தியா பெரிய நாடு, நேச நாடு என கூறிக்­கொண்டு இவ்­வா­றான உடன்­ப­டிக்­கை­களை செய்ய அனு­ம­திக்க முடி­யாது. கடந்த 1999 ஆம் ஆண்டு சந்­தி­ரிகா குமா­ர­துங்க இந்­தி­யா­வுடன் செய்­து­கொண்ட சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையின் போது இலங்கை எவ்­வாறு நெருக்­க­டியை சந்­தித்­தது என்­பதை மறந்­து­விட கூடாது. உடன்­ப­டிக்கை செய்­து­கொள்ளும் போது இருந்த 463 மில்­லியன் டொலர் வர்த்­தக மீதி­யா­னது இந்த பதி­னைந்து ஆண்­டு­களில் 3977 மில்­லியன் டொலர்கள் வரையில் அதி­க­ரித்­துள்­ளது.

நாம் ஏனைய நாடு­க­ளுடன் மேற்­கொள்ளும் பொரு­ளா­தார உறவில் எமக்கு கிடைக்கும் இலா­பத்­திலும் பார்க்க மிகக்­கு­றை­வான இலா­பமே இந்­தி­யா­வு­ட­னான பொரு­ளா­தார நட­வைக்­கை­களின் போது எமக்குக் கிடைக்­கின்­றது. ஆனால் இந்­தியா எமது நாட்டின் வளத்தில் அதி­க­ளவில் இலா­ப­ம­டை­கின்­றது. குறிப்­பாக இலங்கை இந்­திய சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை மூல­மாக இலங்­கைக்கு கிடைத்­துள்ள வரு­மானம் என்று எதுவும் இல்லை. எமது வளர்ச்சி பூச்­சியம் அளவில் தான் உள்­ளது. மாறாக இந்­தியா ஒரு­சில ஏற்ற இறக்­கங்­களை கண்டிருந்தாலும் அடிப்படையில் முழுமையான நன்மையையும் அடைகின்றது.

ஆகவே உடனடியாக அரசாங்கம் இந்த உடன்படிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும். இரகசியமாக இவர்கள் செய்யும் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக பாதிக்கின்றன. இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியை சுரண்டும் ஒரு மறைமுக நடவடிக்கையாகவே இதை கவனிக்க வேண்டும். எனவே அரசாங்கம் இந்த மோசடிகளை நிறுத்தாவிடின் அனைத்து தொழில் சங்கங்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக போராடவேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41