அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்­கா­னிஸ்­தானில் அமெ­ரிக்கா தொடர்ந்து போரில் ஈடு­படப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார்.

இரா­ணுவ கட்­டளைத் தலை­வ­ராக நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை மாலை அவர் ஆற்­றிய முத­லா­வது உரையின் போதே இவ்­வாறு சூளு­ரைத்­துள்ளார்.

ஆப்­கா­னிஸ்­தானில் கடந்த 16  வருட கால­மாக அமெ­ரிக்கப் படை­யினர்  நிலை­கொண்­டி­ருந்த நிலையில் அந்­நாட்­டி­லி­ருந்து அந்தப் படை­யி­னரை விரை­வாக வாபஸ் பெறு­வதால் ஏற்படக்கூடிய ஏற்­றுக் ­கொள்ள முடி­யாத விளை­வு­களை தவிர்க்க அந்­நாட்டில் அமெ­ரிக்கா   தொடர்ந்து போ ரில் ஈடு­பட வேண்­டி­யுள்­ள­தாக  அவர் தெரி­வித்தார்.

அமெ­ரிக்கப் படை­யி­னரை வாபஸ் பெறு­வதால் ஏற்­படக் கூடிய இடை­வெ­ளியை அல்–கொய்தா,  ஐ.எஸ். தீவி­ர­வாத குழு உள்­ள­டங்­க­லான தீவி­ர­வாத குழுக்கள் நிரப்ப முயற்­சிக்­கலாம் என அவர் பத­வி­யேற்­றது முதற் கொண்டு தெரி­வித்து வரு­கிறார்.

 “ ஆப்­கா­னிஸ்­தா­னிலும் எல்லைப் பிராந்­தி­யத்­திலும் நாம் எதிர்­கொண்­டுள்ள அச்­சு­றுத்தல்  பாரி­ய­தா­க­வுள்­ளது” என்று அவர் கூறினார்.

 ஆனால் ஆப்­கா­னிஸ்­தா­னுக்­கான அமெ­ரிக்­காவின்  உதவி வெற்றுக் காசோ­லை­யாக அமை­யாது எனத் தெரி­வித்த அவர்,  தான்  தூர நாடு­க­ளுக்கு ஜன­நா­யகத்தை கட்­டி­யெ­ழுப்­பவும் அமெ­ரிக்­காவின்  சொந்த பிர­தி­மையில் ஜன­நா­யகத்தைக் ஏற்­ப­டுத்­தவும் படை­யி­னரை அங்கு அனுப்பப் போவ­தில்லை எனவும் எச்­ச­ரித்­துள்ளார்.

“நாங்கள்  நாட்டை மீளவும் கட்­டி­யெ­ழுப்பப் போவ­தில்லை. நாம் தீவி­ர­வா­தி­க­ளை  கொல்லப் போகிறோம்"  என அவர் வலி­யு­றுத்­தினார்.

இந்­நி­லையில்  டொனால்ட் ட்ரம்ப் தனது இந்த உரையில் ஆப்­கா­னுக்கு மேல­தி­க­மாக எத்­தனை அமெ­ரிக்கப் படை­யினர் அனுப்­பப்­ப­ட­வுள்­ளனர் என்ற தக­வலை வெளி­யி­ட­வில்லை.

ஆனால் அமெ­ரிக்கப் பாது­காப்பு அமைப்­பான பென்­டகன் ஆப்­கா­னுக்கு 4,000  படை­யி­னரை அனுப்­பி­வைக்க சிபா­ரிசு செய்­துள்­ளது.

இந்­நி­லையில் தலிபான் தீவி­ர­வா­திகள் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு வரும்   அமெ­ரிக்கப் படை­யி­ன­ருக்கு  அந்­நாடு  ஒரு மயா­ன­மாக அமையும் என நேற்று செவ்­வாய்க்­கி­ழமை  எச்­ச­ரித்­துள்­ளனர்.

“அமெ­ரிக்கா ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து தனது படை­யி­னரை வாபஸ் பெறா­விட்டால் இந்த நூற்­றாண்டின் அதி­கார சக்­தி­யா­க­வுள்ள அந்­நாட்­டிற்கு ஆப்­கா­னிஸ்தான் பிறிதொரு மயான பூமியாக மாறும்" என தலிபான் தீவிரவாதக்குழுவின் பேச்சாளர் ஸபியுல்லாஹ் முஜாஹித் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா போரைத் தொடர்வதை விடுத்து வெளியேறும் தந்திரோபாயம் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.