இலங்­கை­யா­னது   விரைவில் சீனா­வி­னதும் இந்­தி­யா­வி­னதும் பரி­சோ­தனை  மைதா­ன­மாக  மாறப்­போ­கின்­றது.  உலக  நடப்­புக்­களைப் பார்க்­கும்­போது இந்த நிலைமை விரைவில் ஏற்­படும் என்று தோன்­று­கி­றது.  அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில்  சீனா காலூன்­றி­யி­ருப்­பதும்  மத்­தள விமான நிலை­யத்தில் இந்­தியா காலூன்­றப்­போ­வதும்  இந்த சமிக்­ஞையை வெளிக்­காட்­டி­யுள்­ளன என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல்ல  தெரி­வித்தார்.  

அம்­பாந்­தோட்­டையில் துறை­முகம் ஒன்றை அமைப்­பது என்­பது நூறு­ வ­ரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்த கன­வாகும். அந்­நிய ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே இவ்­வா­றா­ன­தொரு திட்டம் காணப்­பட்­டது. ஆனால் கடந்த நூறு  வரு­டங்­க­ளாக அதனை யாராலும் செய்ய முடி­ய­வில்லை. எனினும் முன்னாள்  ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ  இந்தக் கனவை நன­வாக்­கினார் என்றும்   அவர்  குறிப்­பிட்டார். 

மத்­தள விமான நிலை­யத்தை  இந்­தி­யாவும் இலங்­கையும் இணைந்து  அபி­வி­ருத்தி செய்­யப்­போ­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்பில்  விப­ரிக்­கை­யி­லேயே  கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல்ல இவ்­வாறு கூறினார்.  

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,-

பொய் ­வாக்­கு­று­தி­களை வழங்­கியே நல்­லாட்சி அர­சாங்கம்   ஆட்­சிக்கு வந்­தது. இன்று அந்த  வாக்­கு­று­திகள் காற்றில் பறக்­க ­வி­டப்­பட்­டுள்­ளன. தாம் ஏமாற்­றப்­பட்­டுள்ளோம் என்­பதை மக்­களும் உணர்ந்து கொண்­டுள்­ளனர்.  நாடு பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.  ஆனால்  அர­சாங்­க­மா­னது  தொடர்ந்து நாட்டின் வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு  விற்கும் செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. தற்­போது அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­விற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதில்  அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­விற்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், விற்­பனை செய்­யப்­ப­ட­வில்லை என்றும் ஒரு விளக்­கத்தை அர­சாங்கம் அளிக்­கி­றது.  ஆனால் 99 வரு­டங்­க­ளுக்கு  குத்­தகை வழங்­கு­கின்­றது என்­பது அதனை விற்­ப­தற்கே சம­ம­ாகும் என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும். எமது  பேரப்­பிள்­ளை­க­ளுக்­குக்­கூட   இந்த துறை­மு­கத்தின் உரிமை கிடைக்­கப்­போ­வ­தில்லை.  

அது­மட்­டு­மன்றி  அம்­பாந்­தோட்­டையில் துறை­முகம் அமைப்­பது என்­பது கடந்த நூறு­வ­ரு­ட­கால கன­வா­கவே இருந்து வந்­தது.  காரணம்  அந்­நிய ஆட்­சிக்­காலத்­தி­லேயே  இந்த இடத்தில் ஒரு­ து­றை­மு­கத்தை அமைப்­பது இலங்­கைக்கு பாரிய நன்­மையை பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக அமையும் என திட்­ட­மி­டப்­பட்­டது.  ஆனால்  அவர்­களால் கூட அதனை செய்ய முடி­ய­வில்லை.  அத்­துடன்  முன்னாள்  ஜனா­தி­பதி  ஜே. ஆர். ஜய­வர்த்­த­னா­வினால் கூட அம்­பாந்­தோட்­டையில் துறை­மு­கத்தை அமைக்க முடி­ய­வில்லை. ஆனால் இந்த  எல்­லா­ வி­ட­யங்­க­ளையும்  உடைத்­தெ­றிந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ

­பக் ஷ அம்­பாந்­தோட்­டையில் துறை­முகத்தை அமைத்தார். அவ்­வாறு அமைத்த துறை­மு­கத்தை இன்று நல்­லாட்சி அர­சாங்கம்  சீனா­வுக்கு வழங்­கி­யுள்­ளது. 

அத்­துடன் நிறுத்­தி­வி­டாமல் அர­சாங்­க­மா­னது  தற்­போது  மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு   வழங்­கப்­போ­வ­தாக  தெரி­விக்­­கின்­றது. இத­னூ­டாக இந்­தி­யாவும்   தென்­னி­லங்­கையில் காலூன்­றப்­போ­கின்­றது. மத்­தள விமான நிலை­யத்­திற்கு 4200 ஏக்கர் காணி  இந்­தி­யா­ வசம் போகப்­போ­கின்­றது.  இதன்­மூலம் எதிர்­கா­லத்தில்  இலங்­கை­யானது  சர்­வ­தே­சத்தின் ஒரு பிடிக்குள்  சிக்­கி­விடும் அபாயம்  இருக்­கி­றது. குறிப்­பாக கூறு­வதென்றால் இலங்­கை­யா­னது இந்­தி­யா­வி­னதும் சீனா­வி­னதும்  பரி­சோ­தனை மைதா­ன­மாக எதிர்­கா­லத்தில் அமை­யப்­போ­வ­தையே இந்த செயற்­பா­டுகள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. இதற்கு ஏற்­றாற்போல் உலக நடப்­புக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த உலக நடப்­புக்­க­ளை ­பார்க்­கும்­போது எதிர்காலத்தில் இலங்கையானது  சீனாவினதும் இந்தியாவினதும்  பரிசோதனை விளையாட்டு மைதானமாக  மாறிவிடும் அபாயம் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி திருகோணமலையிலும் இந்தியா காலூன்ற முயற்சிக்கின்றது. அங்கிருக்கும்  எண்ணெய்த்தாங்கிகள் இந்தியாவிற்கு முக்கியமல்ல. மாறாக  திருகோணமலையில்   காணியே  இந்தியா வுக்கு முக்கியமாக இருக்கிறது. எனவே இவ்வாறு  சர்வதேச நாடுகளின் பிடிக்குள் இலங்கை சிக்கிவிடும் அபாயமே இருக்கிறது என்றார்.