இலங்­கையின் நலனில் சீனா அக்­க­றை­யுடன் உள் ளது. எதிர்­வரும் 15 ஆண்டு­க­ளுக்குள் இலங்­கையை மற்­று­மொரு சிங்­கப்­பூ­ராக அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஏற்ற வகையில் சீனா செயற்­ப­டு­கின்­றது. இதற்கு தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் தொடர்ந்தும் வழங்­குவோம்  என  இலங்­கைக்­கான சீன தூதுவர் யூ ஷியான்­லியாங் தெரி­வித்தார். 

சீன உதவி திட்­டத்தின் கீழ் ஆயிரம் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு1.8 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பாட­சாலை உப­க­ர­ணங்­களை வழங்கும் நிகழ்வு தங்­கா­லையில் நடைப்­பெற்­றது. இதன் போது உரை­யாற்றும் போதே சீன தூதுவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில் ,

இலங்கை சீனாவின் மிகச் சிறப்­பான நண்­ப­ராகும். இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நட்பு 70 ஆண்­டு­க­ளுக்கும் மேலான பழை­மை­யான ஒன்­றாகும். இரு நாடு­களின் நீண்­ட­கால உற­விற்கு கார­ண­மா­கிய இறப்பர்- அரிசி ஒப்­பந்­தத்தை  இரண்டு நாடு­களின் மக்­களும் நன்­றாக அறி­வார்கள். இந்த நட்பின் அடை­யா­ள­மாக கடந்த பல ஆண்­டு­க­ளாக சீனா தனது அனைத்­து­லக உதவி திட்­டத்தில் அதி­கூ­டிய பங்கை இலங்­கைக்கு வழங்கி வரு­கின்­றது. இலங்­கையின் அபி­வி­ருத்தி மற்றும் இந்த மக்கள் மீது சீனா­விற்கு தனிப்­பட்ட அக்­க­றையும் பொறுப்பும் உள்­ளது.

தற்­போ­தைய சூழலில் இலங்­கைக்கு அபி­வி­ருத்தி என்­பது மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மான ஒன்­றாகும். ஆகவே நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அர­சாங்­கத்­துடன் மக்­களும் ஒத்­து­ழைக்க வேண்டும். இலங்­கையின் தென்­ப­கு­தியில் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கத்தை ஆரம்­பிக்க சீனா ஒத்­து­ழைப்பு வழங்கும். இந்த பகுதி வாழ் இளை­ஞர்­களின் தொழில்­நுட்ப ஆற்­றலை விருத்தி செய்தல் , மீன்­பிடி மற்றும் ஏனைய துறை­களில் தொழில்­நுட்ப வச­தி­களை அதி­க­ரித்தல் போன்ற விட­யங்­க­ளுக்கு சீனா உதவு உள்­ளது. 

சீன - இலங்கை நட்­பு­றவு சங்­கத்தின் மூலம், 1300 இலங்கை மாண­வர்­க­ளுக்கு சீனா புல­மைப்­ப­ரிசில் வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளது.  இது எதிர்­கா­லத்தில் 2000 ஆக அதி­க­ரிக்­கப்­ப­தற்கு சீன அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இவ்­வாறு பல­வேறு திட்­டங்கள் தொடர்பில் சீனா மிகவும் ஈடுப்­பா­டுடன் செயற்­ப­டு­கின்­றது. குறிப்­பாக தென்­ப­கு­தியில் உள்ள மீன­வர்­க­ளுக்­கான வீடு­களை அமைத்துக் கொடுப்­ப­தற்­கான திட்­டத்தை ஆரம்­பிக்­கவும் உத்­தே­சித்­துள்­ளது. 

சீனாவின் ஷங்காய் நக­ரத்தைப் போன்று இலங்­கையின் தென்­ப­கு­தியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு சீனா தொடர்ந்தும் தேவையான  உதவிகளை வழங்கும். அடுத்த 15 ஆண்டுகளில் இலங்கை சிங்கப்பூரின் நிலைக்கு தரமுயர்த்துவதற்காக சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் . இலங்கையின் நலனில் சீனா அக்கறையுடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.