'முத்தலாக்' முறைக்கு தடை

22 Aug, 2017 | 03:19 PM
image

முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்ட அங்கீகாரமற்றது என உயர்நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

முத்தலாக் தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் முத்தலாக் முறைக்கு எதிராகவும், 2 நீதிபதிகள் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

இறுதியாக, முத்தலாக் முறைக்கு ஆறு மாதங்கள் இடைக்கால தடை விதித்து 5 நீதிபதிகளும் ஒருமனதாக உத்தரவிட்டனர்.

மேலும், “மத்திய அரசு 6 மாதத்தில் அவரச சட்ட திருத்தம் கொண்டு வந்து முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அப்படி 6 மாதத்திற்கு சட்டம் இயற்றவில்லையென்றால் முத்தலாக் மீதான தடை நீடிக்கும். அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை விட்டு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றின் இந்த உத்தரவிற்கு உ.பி. அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த உ.பி. சுகாதாரத்துறை அமைச்சரும், அரசின் செய்தித்தொடர்பாளருமான சித்தார்த் நாத் சிங் "உயர்நீதிமன்றின் முடிவு வரலாற்று சிறப்புமிக்கது. 

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக உள்ளது, ஆனால் அதன் வரையறை மத அடிப்படையினால் சிதைந்து போனது. தப்போது, உயர்நீதிமன்றம் முத்தலாக் முறை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளது. இந்த முடிவு இந்திய அரசின் மதசார்பின்மைக்கு வலிமையை அதிகப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.

முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவித்ததற்கு நாடு முழுவதும் பாராட்டும் எதிர்ப்பும் குவிந்து வருகின்றன. புதுச்சேரி ஆளுரநர் கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், "முத்தலாக் விவகாரத்தில் சட்டத்துறை என்ன செய்திருக்க வேண்டுமோ அதை உச்ச நீதிமன்றம் தற்போது அறிவுறுத்தியுள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒழிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, "முத்தலாக் முறை சட்டவிரோதமானது என மூன்று நீதிபதிகள் அறிவித்திருப்பது மன திருப்தியளிக்கிறது" என பாஜக பிரமுகர் ஷாசியா இல்மி கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52