கணவனுக்கு முன்னால் மனைவி சென்றதால் நேர்ந்த விபரீதம்

22 Aug, 2017 | 02:55 PM
image

சவூதி அரேபியாவில் நடந்து செல்லும் போது கணவனின் பேச்சைக் கேட்காமல் முன்னால் நடந்து சென்றதால் விவகாரத்து வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவூதியில் சிறிய காரணங்களுக்காக விவாகரத்து கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வரிசையில் மனைவியின் சிறிய செயலுக்காக கணவன் விவாகரத்து கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கணவன் - மனைவி இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மனைவி கணவனுக்கு முன்னால் நடந்த சென்றதாக கூறப்படுகிறது. முன்னால் நடந்து செல்லக் கூடாது என கணவன் பல தடவை எச்சரித்தும் அப்பெண் நிற்காமல் நடந்து சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த கணவன் விவாகரத்து வழங்க முடிவு செய்து மனைவிக்கு விவாகரத்து வழங்கியுள்ளான்.

இதேபோன்று பல சம்பவங்கள் சவூதி அரேபியாவில் அரங்கேறி வருகிறது. மனைவி இரவு உணவின் போது ஆட்டின் தலையை பரிமாறாத காரணத்திற்காக கணவன் விவாகரத்து வழங்கியுள்ளான். அதேபோல் மற்றொரு பகுதியில் கொலுசு அணிந்த குற்றத்திற்காக மனைவியை விவாகரத்து செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் லத்தீபா ஹமீத் கூறுகையில், இளைய சமுதாயத்தினருக்கு அவர்களது குடும்பத்தினர் இது குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும். அதேபோல் குடும்ப பிரச்சனைகளை எதிர் கொள்வது குறித்த விழிப்புணர்வை அவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35
news-image

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பல்டிமோர்...

2024-03-26 15:02:50