மட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள கிராமமான சர்வோதய நகர் கிராமத்தில் யானை வளவுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் விரட்டியுள்ளது.

நேற்று இரவு சுமார் ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக இந்த யானை பிரச்சனை தொடர்பாக பலரிடமும் முறைப்பாடு செய்து இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யானை வேலி அடைப்பதற்கான கட்டைகள் பல இடங்களில் போடப்பட்டு அவைகளும் கவனிப்பார் அற்று இறந்து போகும் நிலையில் காணப்படுகின்றது. 

இந்த வயல் கிராமங்களில் அண்மைக்காலமாக யானைகள் மூலம் பல உயிர் சேதங்களும் இடம்பெறுள்ளமை குறிப்பிடத்தக்கது.