மூன்று அதிவேக வீதிகளையும் சீனாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி

Published By: Robert

22 Aug, 2017 | 10:23 AM
image

Image result for உதய கம்­மன்­பில virakesari

இலங்­கையின் பிர­தான மூன்று அதி­வேக நெடுஞ்­சா­லை­களை சீன நிறு­வனம் ஒன்­றுக்கு விற்­பனை செய்ய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார். தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

சீனாவின் செங்டொங் என்ற நிறு­வ­னத்­திற்கு கொழும்பு கட்­டு­நா­யக்க, கொழும்பு சுற்­று­வட்­டார அதி­வேக நெடுஞ்­சாலை,  தெற்கு அதி­வேக நெடுஞ்­சாலை ஆகி­ய­வற்றை 600 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு விற்­பனை செய்ய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

விற்­பனை செய்­யப்­போ­வ­தில்லை என்று கூறிக்கொண்டு 35 வரு­டங்­க­ளுக்கு குத்­த­கைக்­குத்தான் வழங்­கினோம் என்று அர­சாங்­கத்தில் இருக்­கின்­ற­வர்கள் பதி­ல­ளிப்­பார்கள் என்­பதை நாம் அறிவோம். இருப்­பினும் 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக குத்­த­கைக்கு விடப்­ப­டு­கின்ற ஒரு வள­மா­னது விற்­பனை செய்­யப்­ப­டு­கின்ற ஒன்­றா­கவே கரு­தப்­படும். எவ்­வா­றா­­யினும் இந்த விடயம் குறித்து இன்று இடம்­பெ­ற­வுள்ள அமைச்­ச­ரவை சந்­திப்­பிலும் பேசப்­ப­ட­வுள்­ளது. இவ்­வாறு நாட்டின் வளங்கள் அனைத்­தையும் விற்­பனை செய்­து­விட்டால் இறு­தியில் நாட்டு மக்கள் மாத்­தி­ரமே எஞ்­சி­யி­ருப்­பார்கள். அவ்­வா­றான ஒரு நாள் வரை காத்­தி­ருக்­காமல் அர­சாங்­கத்தை எதிர்த்து மக்கள் வீதி­யி­லி­றங்க வேண்டும்.  இல்­லா­விடின் அர­சாங்­கத்தில் இருக்­கின்­ற­வர்கள் எம்­மையும் விலை­பேசி விற்­று­வி­டு­வார்கள்.

இந்த நாட்­களில் வீதி­யோ­ரங்­களில்  ஒரு சுவ­ரொட்டி ஒட்­ட­ப்பட்­டி­ருப்­பதை காண முடி­கின்­றது. அதனில் உண்­ணத்தான் வந்தோம், உண்டு முடித்த பின்பே திரும்­புவோம் என்று எழுதப்பட்டுள்ளது.

அவை   வெறும் சொற்களாக மாத்திரம் எனக்கு தெரியவில்லை. மாறாக நல்லாட்சி அரசாங்கத்தினால் தற்போது அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நாடகமாகவே எமக்கு தெரிகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01