ஹஜ்ஜுப் பெருநாளை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று

Published By: Robert

22 Aug, 2017 | 09:15 AM
image

Image result for பிறைக்குழு மாநாடு

புனித துல்­ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிறைக்­குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழு­கையின் பின்னர் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நடை­பெ­ற­வுள்­ளது. ஆகவே இன்­றைய மாநாட்டின் போதே புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்­டாடும் தினமும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது.

புனித துல்­ஹிஜ்ஜஹ் மாதத்தின் 10 ஆம் நாள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்­டா­டப்­ப­டு­கி­றது. ஆகவே பிறைக்­கு­ழுவின் இன்­றைய தீர்­மா­னங்­க­ளுக்கு அமை­வா­கவே ஹஜ்ஜுப் பெருநாள் தினம் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது.

எனவே இன்று கூடும் பிறைக்­குழு மாநாட்டில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை உறுப்­பி­னர்கள், பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள உறுப்­பி­னர்கள், மேமன், ஹனபி உட்­பட பள்­ளிவாசல் நிர்­வா­கி­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

மேலும் துல்­ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்­பிறை பார்ப்­ப­தற்கு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிறைக்­கு­ழுவும் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலும் இணைந்து தமது பிர­தி­நி­தி­களை நாட்டின் பல பாகங்­க­ளுக்கும் அனுப்­பு­வ­தற்கு ஏற்­பா­டு­செய்­துள்­ளது. எனவே அப்­பி­ர­தி­நி­திகள் வழங்கும் தகவலுக்கு அமைவாக துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தீர்மானிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27