செப்டெம்பர் முதல் வார இறு­திக்குள் அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்கை

Published By: Robert

22 Aug, 2017 | 09:05 AM
image

புதிய அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்கை வரைவு எதிர்­வரும் செப்டெம்பர் முதல்­வார இறு­திக்குள் வெளியி­டப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார். அதே­நேரம் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இறுதி செய்­யப்­பட்ட முன்­மொ­ழி­வுகள் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழ­மை­யன்று வழி­ந­டத்தல் குழு­வி­டத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

மேலும் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­து­வ­தற்கு முன்­ன­தாக பிர­தான கட்­சி­களின் பிர­தி­நி­திகள் இணைந்த குழு­வினர் புதிய அர­சி­யல­மைப்பு குறித்த உரிய தெளிவு­ப­டுத்­தலை வழங்கும் வகை­யி­லான பிர­சா­ர­மொன்றை முன்­னெ­டுக்க வேண்­டி­யது அவ­சியம். அதற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்று இணக்கம் காணப்­பட்­ட­தோடு அனைத்து மாகா­ணங்­க­ளுக்­கு­மான தேர்­தலை ஒரே தினத்தில் வைப்­ப­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்சி முன்­மொ­ழிந்­துள்ள 20ஆவது திருத்­தச்சட்டம் குறித்து பல்­வேறு தரப்­பி­னரால் ஆட்­சே­பமும் வெளியி­டப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று திங்­கட்­கி­ழமை இரவு 9.30க்கு கட்­சித்­த­லைவர்கள் கூட்டம் ஜனா­தி­பதி இல்­லத்தில் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்­க்கட்சி தலைவர் சம்­பந்தன், அமைச்­சர்­க­ளான லக் ஷ்மன் கிரி­யல்ல, மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம, நிமல் சிறி­பால, ரவூப் ஹக்கீம், மனோ ­க­ணேசன், பழனி திகாம்­பரம், கபீர் ஹாசீம், ராஜித, சம்­பிக ரண­வக்க, சுசில் பிரே­ம்­ஜ­யந்த, சரத் அமு­னு­கம, அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா, டிலன் பெரேரா மற்றும் சுமந்­திரன் எம்.பி ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர். 

இச்­சந்­திப்பின் போது முதலில் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள், 20ஆவது திருத்­த­சட்டம், உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்­பாக நிர­லாக கலந்­து­ரை­யா­டு­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 

புதிய அர­சி­ய­ல­மைப்பு

அத­ன­டிப்­ப­டையில் முதலில் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இச்­ச­ம­யத்தில் வழி­ந­டத்தல் குழுவில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஜனா­தி­ப­திக்­கான நிறை­வேற்று அதி­கா­ர­மு­றைமை, நாட்டின் தன்மை உள்­ளிட்ட விடங்­களில் தமது நிலைப்­பா­டு­களை இறுதி செய்து முன்­மொ­ழிவைச் செய்­ய­வில்லை. அதற்­கான கால அவ­கா­சத்­தினைக் கோரி­யுள்ள போதும் அவ்­வி­டயம் தொடர்­பாக தொடர்ந்தும் தம­தங்­களே நில­வு­கின்­றன என்று முதலில் ஜனா­தி­ப­தி­யி­டத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. 

இச்­ச­ம­யத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தொடர்ந்தும் கால­தா­மத்­தினைச் செய்­யாது. எதிர்­வரும் வார இறு­திக்குள் தமது நிலைப்­பாட்­டினை வழி­ந­டத்தல் குழுவில் சமர்ப்­பிக்கும் என்று குறிப்­பிட்டார். அச்­ச­ம­யத்தில் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை வழி­ந­டத்தல் குழு கூடு­கின்­ற­மையால் அன்­றை­தி­னமே சு.க.வின் இறுதி முன்­மொ­ழிவைச் சமர்­பித்தால் பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டது. 

அதனை ஆமோ­தித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சேன எதிர்­வரும் வியா­ழக்­கி­ழ­மை­யன்றி சமர்ப்­பிப்­ப­தா­கவும் குறிப்­பிட்­ட­தோடு நின்­று­வி­டாது, அவ்­வாறு சுதந்­தி­ரக்­கட்சி தனது முன்­மொ­ழிவைச் சமர்ப்­பிக்கும் பட்­சத்தில் இடைக்­கால அறிக்­கையின் வரை­வினை எதிர்­வரும் செப்­ரம்பர் மாதத்தின் முதல் வாரத்தின் இறு­திக்குள் சமர்ப்­பித்து விட­மு­டியும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக அடுத்த கட்­ட­மாக செய்­ய­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் சில உள்­ள­தாக குறிப்­பிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால,  குறிப்­பாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு குறித்து பல்­வேறு கருத்­துக்கள் கூறு­கின்­றார்கள். புதிய அர­சி­ய­ல­மைப்பு சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்­புக்குச் சென்றால் தோல்­வி­ய­டைந்து விடும் என்று கூறு­கின்­றார்கள். 

உண்­மையில் மக்கள் மத்­தியில் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து பூர­ண­மான தௌிவான நிலை­மை­யொன்று காணப்­ப­ட­வில்லை.ஆகவே புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து மக்­க­ளுக்கு தௌிவு­ப­டுத்­த­வேண்டும். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டால் நாடு பிள­வ­டைந்து விடும் என்று மக்கள் அச்­ச­மூட்­டப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

ஆகவே சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­ல­முதல் அந்த நிலைமை போக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­காக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தி­நி­தி­களும், சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தி­நி­தி­களும் இணைந்து கூட்­டாக புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து மக்­க­ளுக்கு தௌிவு படுத்தும் பிர­சா­ரத்­தினை முன்­னெ­டுக்க வேண்டும். அந்த நட­வ­டிக்­கையை தாம­த­மின்றி ஆரம்­பிக்க வேண்டும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.  இதற்கு அனைத்து தரப்­பி­னரும் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர். 

20ஆவது திருத்­தச்­சட்டம்

இத­னை­ய­டுத்து அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே நேரத்தில் தேர்­தலை நடத்­து­வ­தற்­காக கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி தீர்­மா­னித்­துள்ள 20ஆவது திருத்­தச்­சட்டம் குறித்து பேச்­சுக்கள் எழுந்­தன. இதன்­போது, தேர்­தல்கள் தள்­ளிப்­போ­வ­ததை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். தேர்­தல்கள் தள்­ளிப்­போ­வது ஜன­நா­ய­கத்­தினை பாதிக்கும் விட­ய­மாகும். மாகா­ண­சபைச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­ய­வேண்­டு­மாயின் ஒரு­சில மாதங்கள் தள்­ளிப்­போ­வ­தனை அனு­ம­திக்க முடியும். ஆனால் அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே தரு­ணத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்­ப­தற்­காக குறிப்­பிட்ட சில மாகா­ணங்­க­ளுக்­கான தேர்­தலை மட்டும் தள்­ளிப்­போ­டு­வ­தென்­பது பொருத்­த­மா­ன­தல்ல என் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் உட்­பட ஏனை தரப்­புக்கள் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளன. 

அத்­துடன் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான சட்­ட­மூ­லத்­தினை நிறை­வேற்றி தேர்­தல்லை நடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிரிக்க வேண்டும், உறுப்பினர்களின் எண்ணிக்கை மீளாய்வு செய்யப்படவேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. 

இதன்போது தற்போதைக்கு அந்த விடயங்களை மேற்கொள்ளாது இருக்கின்றபடியே உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு முகங்கொடுப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டினை வௌியிட்டிருந்தார். 

இருப்பினும் அதற்கு அனைத்து தரப்பினர்களிடையேயும் இணக்கப்பாடு எட்டப்படாமையின் காரணமாக 20ஆவது திருத்தச்சட்டம், உள்ளுராட்சி மன்றங்கள் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படாது கூட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரியவருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02