'புள் பேஸ்' வங்கிக்கொள்ளைகளின் பின்னணியில் இவர்களா.?

Published By: Robert

21 Aug, 2017 | 11:18 AM
image

தெஹி­வளை அத்­தி­டிய பகு­தியில் அண்­மையில் தனியார் வங்கி ஒன்றின் பாது­கா­ப்பு உத்­தி­யோ­கத்­தரை சுட்டுக்கொன்­று­விட்டு பணக் கொள்­ளையில் ஈடு­பட்ட முகத்தை முழு­மை­யாக மறைக்கும் புள் பேஸ் ஹெல்மட் கொள்ளை கோஷ்டி, பாதாள உலகின் கொஸ்­கொட தாரக, ஹப­ரா­க­டுவ வசந்த குழு­வி­ன­ராக இருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

நாட­ளா­விய ரீதியில் இடம்­பெற்ற  புள் பேஸ் தலைக்கவசம் அணிந்த, நிதி நிறு­வனங்கள் மற்றும் வங்­கிக்­கொள்­ளைகள் பல இந்த பாதாள உலக குழுவி­ன­ரா­லேயே முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ள­தாக தக­வல்­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்ள பொலிஸார், அதன் சி.சி.ரி.வி.. காட்­சி­களை ஆய்வு செய்த பின்னர் அதில் உள்ள ஒற்­று­மை­களை மையப்­ப­டுத்தி அத்­திடிய வங்­கிக்­கொள்­ளையும் அந்த குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தே­கத்தில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இந்நிலையில் தலை­ம­றை­வாகி இருக்கும் கொஸ்­கொட தாரக உள்­ளிட்­டோரைக் கைது செய்ய பொலிஸ் விசா­ர­ணைகள் ஆரம்பிக்­கப்பட்­டுள்­ள­தாக உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார். கறுப்பு நிற கோர்ட் அணிந்து, முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்து ஆயு­தத்­துடன் இந்த கொள்ளைக் கோஷ்டி மோட்டார் சைக்­கிளில் சென்று கடந்த 10 ஆம் திகதி அத்­தி­டிய பகு­தியில் தனியார் வங்­கி­யொன்றை கொள்­ளை­யிட்­டது.

இதன் போது அவ்­வங்­கியின் பாது­கப்பு கட­மையில் இருந்த பாது­கா­ப்பு உத்­தி­யோ­கத்­தரையும் அக்­கொள்ளைக் குழு சுட்டுக் கொன்­றது. குறித்த கொள்­ளைக்கு முன்னர் தெஹி­வ­ளை­யிலும் அத்­தி­டி­ய­விலும் உள்ள தனியார் நிதி நிறு­வனங்கள் இரண்டில் இந்த கொள்ளைக் குழு கொள்­ளைக்கு முயன்ற போதும் அது சாத்­தி­யப்­பட்­டி­ருக்­க­வில்லை. இந்நிலையில் அது தொடர்­பி­லான அனைத்து சி.சி.ரி.வி காட்­சி­களும் விசா­ர­ணை­யா­ளர்­களால் அல­சப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் கடந்த மே மாதம் மீரி­கம பகு­தியில் தனியார் வங்கி ஒன்றில் இடம்­பெற்ற இதனை ஒத்த கொள்ளை சம்­பவம் தொ­டர்பில் விசா­ர­ணை­களை நடத்­திய  மேல் மாகா­ணத்தின் வட பிராந்­திய குற்றத் தடுப்புப் பிரிவு விசா­ர­ணையில் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்ள தக­வல்கள், சி.சி.ரி.வி. காட்­சி­க­ளுக்கு அமைய இவை­ய­னைத்தும் ஒரே குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. இந்நிலையில் மீரி­கம கொள்ளை தொடர்பில் நடந்த விசா­ர­ணை­களில் கொஸ்­கொட தாரக அதில் தொடர்­பு­பட்­டுள்­ளதை வெளிப்­ப­டுத்­திய பொலிஸார், அவன் தலை­ம­றை­வ­ாகி­யுள்ள நிலையில் அவ­னது சகா­வான பலாங்­கொட ஒட்­டு­வாவைக் கைது செய்­துள்­ளனர். அவ­னிடம் முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் மீரி­கம கொள்ளை ஹப­ரா­கடுவ வசந்­தவின் திட்டம் என்பது தெரி­ய­வந்­துள்­ளது.

ஹப­ரா­க­டுவ வசந்­தவின் கீழேயே கொஸ்­கொட தாரக செயற்­பட்டு வந்த நிலையில் அவ்­வி­ரு­வரும் தற்­போது தலை­ம­றை­வாகி­யுள்­ளதால் அவர்­களை தேடும் படலம் முடுக்கி விடப்பட்­டுள்­ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38