(க.கமலநாதன்)

வடக்கு உழவர் பெருவிழா முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றம் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்துகொண்டுள்ளனர்.

உழவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக நடைபெறவுள்ள இந்த உழவர் பெருவிழாவில் மாவட்ட ரீதியாக 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களும், சேதனப் பயிர்ச் செய்கையாளர்களும், கால்நடைப் பண்ணையாளர்களும், கோழிப் பண்ணையாளர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இங்கு சிறப்புரை ஆற்றிய பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து ஈழத்தின் பெருங்கதையை மகா காவியமாக்குவதே தனது வாழ்நாள் திட்டம் என உருக்கத்துடன் தெரிவித்தார்.

அங்கு தொடர்நதும் உரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, 

அரசத்துறை அதிகாரிளே பாராளுமன்ற உருப்பினர்களே என்து தொப்புல்கொடி உறவுகளே அனைருவக்கும் எனது அன்பான வணக்கமும் வாழ்த்துக்களும் இந்த விழாவை தொகுத்து வழங்கும் நண்பர் அடிக்கடி வானத்தை அன்னாரந்து பாரத்தார் அப்போதௌ;ளமட அவருக்கொரு அச்சம் மேலிட்டது. எங்கே  வானத்தின் முடிச்சிகள் அவிழ்ந்து விடுமோ இந்த மன் நளைந்து விடுமோ அந்த மழையில் எங்களது தலைவர்கள் கரைந்து விடுவார்களோ அல்லது கூட்டம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக மழையெ தனிந்து விடு வருண பகவாயே அருள்புரி என்றெல்லாம் வானத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

எனது தமிழ் உறவுகளான உங்களையெல்லாம் பார்கின்ற போது என்தோல்கள் விரிவடைகின்றது மார்பகள் அகலமாகின்றன. உங்கள் கண்ணீரில் உங்கள் துயரத்தில் இந்தியாவில் அழுதுகொண்டிருந்த ஆன்மா உங்கள் முன்னிலையில் இன்ற உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்.

உங்களை நலம் விசாரிக்க வந்தேன் உங்கள் கைகளை தொட்டுபார்க்க வந்தேன். உங்கள் கண்களில் நம்பிக்கை வெளிச்சம் இருக்கின்றதா என்று பார்க்க வந்தேன்.உங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தேன்  உங்கள் அன்பை பகிர்ந்துகொள்ள வந்தேன்.வாழ்க்கை இன்னும் மிச்சம் இருக்கின்றது என்ற உங்கள் நம்பிக்கையை விதைக்க வந்தேன்.

நான் கொழுப்பு வந்திருக்கிறேன் ஆனால் இந்த யாழ்பாணத்திற்கு இப்போது தான் முதல் முறையாக வந்து மண்னை தொட்டு வணங்குகிறேன்.மண்i தொட்டபோது எனக்கு வந்த உணர்வை ஆயிரம் சொற்களாலும் எழுதிக்காட்ட முடியாது.முதல் முறை மண்ணில் விழுகிற போது மழைத்துளிக்கு ஒரு  சிலிர்ப்பு  வருமே மண்ணுக்கு ஒரு உயிர்ப்பு வருமே அந்த சிலிர்ப்பு அந்த உயிர்ப்பு உயிர்ப்பில் ஒரு பூப்பூக்குமே முதல் முத்தம் குழந்தைக்கு விழுகிறபொழுது தாயின் இதயம் துடிதுடிக்குமே அந்த துடிப்பு இவைகளையெல்லாம் இந்த மண்ணை தொட்டுப்பார்த்த போது எனது உடம்பு உணர்ந்தது.

என் தமிழ் உணர்ந்தது காரணம் உங்கள் பாரீர் நாங்கள் எங்கள் பாரீர் நீங்கள் அதனால் இந்த ரத்த உணர்வு அறிய உணர்வு விட்டுப்போகாது. எமது ஊர்பெயர்கள் வெறும் வார்த்தைகள் அல்ல வவுனியா,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் என்று உச்சரிக்கிற போதெல்லம் இவை ஊர்ப்பெயர்கள் அல்ல சரித்திரத்தின் பெரும் குறிப்புகள் என்று உணர முடிகிறது. அதேபோல் ஆசியாவில் கல்வியில் முதலிட்த்தில் உள்ள இந்த மண்ணிலிருந்து பேசிக்கொண்டிருக்கின்றேன்.

உலகத்தமிழ் உறவுளுக்கெல்லாமம் தமிழ் தமிழர் முகவரியை எழுதிக்காட்டிய மண்ணிலிருந்து பேசிக்கொண்டிருக்கின்றேன். சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும். என் சாம்பலும் தமிழ் மணநது வேக வேண்டும். என்று எழுதிய இலங்கைப் புலவர் சச்சிதானந்தன் இருந்த மண்ணிலே நான் இருக்கின்றறேன்.வெட்டிவேறு வாசம் என்ற தமிழ் பாடல் எழுதியன் பெருமைகள் அனைத்தும் எனக்கே கிடைத்தன ஆனால் அவை அனைத்தும் இலங்கையின் தோட்ட தொழிலாளர்களுக்கு உரித்துடையவை.எனவே அவர்களுக்கு காணிக்கை செலுத்தவும் தான் வந்திருக்கின்றேன். 

சகோதர்களே எனவே இந்த மண்ணில் நான் நிற்கிற போது உலகத்தில் எந்த இனமும் படாத துயரை என் தமிழினம் பட்டுவிட்டதே என்ற வேதனை எனக்கு எழுகின்றது.வராலாற்றின் கண்களில் இரத்தம்கசிந்துக் கொண்டிகிறது. அந்த இரத்தத்தை வரலாறு குறித்துக்கொள்ளட்டும். எங்கள் மக்களின் கண்ணீரைத் துடைப்தே தற்போதுள்ள தேவை.

உறவுகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போகவே இங்கு வந்திருக்கின்றேன். இந்த மண்ணில் இன்று பெருமிதத்துடனும் துயருடனும் உங்கள் முன்னால் நின்றுக்கொணடிருக்கிறேன்.என்னை இந்த விழாவுக்கு ஏன் அழைத்தார்கள் என்றும் பலமுறை யோசித்து பார்த்தேன்.

வடக்கின் முதலைமைச்சர் தான் அதற்கான காரணம் 20 நிமிடங்கள் உறையாடிய போது அவர் எத்தகைய சான்றோன் என்று. அவருடன் உரையாடிய பெருமித்தில் அவருக்கு நன்றி கூறுகிறேன். அவர் அழைத்தால் தான் இந்த மண்ணை முத்தமிடும் பேரு பெற்றேன். முள்ளிவாய்க்கால் பார்த்தேன் முல்லைத்தீவையும் பார்த்தேன்.

ஆணையிரவு சாவகச்சேரியையும் கடந்து வந்தேன் இவையெல்லாம் பாரத்தபோது நெஞ்சில் ஒரு கல்வெட்டுபோல் தவவல்கள் விரிகின்றன.நான் அவற்றை பற்றி மட்டும் பேச வரவில்லை ஆனால் இந்த வீரம் வாழ்வியல் எல்லம் இந்த மண்ணில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வேட்கையை ஒரு படைப்பாளி என்ற வகையில் நான் பெற்றிருக்கின்றேன்.

ஆகவே ஈழத்து மண்ணின் பெருங்கதையை ஒரு மகா காவியம் ஆக்குவதுதான் வைரமுத்துவின் வாழ்நாள் திட்டம் என்பதை நான் இந்த மண்ணில் தெரிவித்துக்கொள்கிறேன்.எழுதுவேன் என் நெஞ்சில் ஈரம் இருக்கும் காலம்வரை. 

அதோபோல் இன்று என்னை இங்கு அழைத்மைக்கு இவையல்ல  பிரதான காரணம் நான் விசவாயி விவசாயத்த்தின் வலியை அறிந்தவன்பே காரணம் அந்தவகையில்.

தமிழர்களின் ஆதிப் பெருந்தொழில் முதலில் வேட்டை, பிறகு வேளாண்மை. மரபு வழி அறிவோடு வேளாண்மையை அறிவியல்பூர்வமாகக் கையாண்டவர்கள் தமிழர்கள். ஜப்பானிய நடவு முறை தான் பயிர்களுக்கு இடைவெளியைச் சொல்லிக்கொடுத்தது என்று சொல்லுகிறார்கள். ஆனால் அதற்கும் முன்பே வேளாண்மையில் நடவுமுறையை விஞ்ஞானப்படுத்தியவர்கள் தமிழர்கள்.

நெல் நாற்று நட்டால் இரண்டு நெற்பயிர்களுக்கு இடையில் நண்டு ஊர்ந்து செல்லவேண்டும், கரும்பு நட்டால் இரண்டு கரும்புகளுக்கு மத்தியில் நரி ஓடும் இடைவெளி இருக்கவேண்டும். வண்டி ஓடுகின்ற இடைவெளியில் வாழைக் கன்றுகள் நடப்படவேண்டும். தென்னை மரம் நட்டால் இரண்டு தென்னைகளுக்கு இடையில் தேர் ஓடவேண்டும். 

நண்டு ஊர நெல்லு, நரி ஓடக் கரும்பு, வண்டி ஓட வாழை, தேர் ஓடத் தென்னை

என்ற வேளாண்மை விஞ்ஞானம் படைத்தவர்கள் தமிழர்கள். அதனால் தான் திருவள்ளுவர் உழவுக்கு என்று அதிகாரமே இயற்றினார்.  இரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இரசாயன உரங்களால் விளையும் விளைச்சலால் மனிதகுலம் புற்று நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் இருக்கிறது. 

இராசயன உரங்கள் வளர்ந்து வந்த கதையே வேறு. முதல் உலகப்போரில் எட்டு இலட்சம் கைதிகளைக் கொன்று குவித்த அமோனியாப் புகை தான் போர் முடிந்ததும் பூச்சி கொல்லிமருந்தாய் உருமாறியது. இரண்டாம் உலகப்போரில் மனித குலத்தை அழிக்கப்பயன்பட்ட அமோனியா சூப்பர்பாஸ்பேர்ட் என்ற வெடி உப்புக்களைத் தான் போர் முடிந்ததும் வர்த்தகச் சூதாடிகள் இரசாயன உரங்களாக மாற்றி விற்பனைச் சந்தையை ஏற்படுத்தினார்கள். 

ஆனால் தமிழர்கள் கண்டறிந்த இயற்கை உரம்தான் மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு செய்யாதது. மண்ணுக்கு உயிர் உண்டு என்று கண்டறிந்தவர்கள் தமிழர்கள். அதனால்தான் மண்ணை நிலமென்னும் நல்லாள் என்றும் பூமாதேவி என்றும் கொண்டாடினார்கள். 

புது யுகத்தின் தமிழ் இளைஞர்களே, உங்கள் வாழ்வு கணிப்பொறியோடு முடிந்துவிடுவதில்லை. விஞ்ஞானம் கற்றுக்கொண்டு வேளாண்மைக்குத் திரும்புங்கள். நடந்து முடிந்த பெரும்போர் உங்கள் வாழ்வைக் குலைத்திருக்கிறது. உங்கள் உறவுகளை அழித்திருக்கிறது. பெற்ற பெரும்துன்பங்களிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும். அடைந்த துன்பங்களையே அனுபவங்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். எல்லாத் துயரங்களுக்குக் கீழேயும் நம்பிக்கை என்ற விதை அழியாமல் கிடக்கிறது. அதை முளைக்கச்செய்யுங்கள். 

யாழ்ப்பாணம் வந்து இறங்கியதும் இந்த மண்ணை என் உள்ளங்கையிலெடுத்து என் நெற்றியில் வைத்து வணங்கினேன். முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் கனத்த மனத்தோடு என் கண்ணீரைச் சிந்தினேன். யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, ஆனையிறவு, அம்பாறை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை, புங்குடுதீவு என்பவை எல்லாம் வெறும் ஊர்ப்பெயர்கள் அல்ல. இந்த நூற்றாண்டின் வரலாற்றுக் குறிப்புக்கள். ஈழமகாகாவியம் ஒன்றை எழுதிமுடிப்பதைத் தான் என்வாழ்நாளின் பெரும்பணியாகக் கருதிக்கொண்டிருக்கிறேன். கடும் உழைப்பில் அதை நான் நிறைவு செய்வேன். 

இனி இந்த மண்ணில் இரத்தம் சிந்தவேண்டாம், எங்கள் தமிழ் மக்கள் புதிய திசையில் புதிய வாழ்வு பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தத் தியாகத் திருமண்ணில் நின்றுகொண்டு சொல்லுகிறேன், 

ஏ நிலமே உன்னில் நாங்கள் புதைத்தது போதும் இனிமேல் விதைப்பதற்கு இடம்கொடு. 

ஏ கடலே உன் அலைகள் இரத்தத்தால் சிவந்தது போதும் இனிமேலாவது வெள்ளை அலைகளை வீசு. 

ஏ தீயே எங்கள் கூரைகளில் எரிந்தது போதும் இனியாவது அடுப்பில் எரி. 

ஏ காற்றே எங்கள் சுவாசப்பைகளை வாழ்வால் நிரப்பு, 

ஏ ஆகாயமே உன் மீது வெடிகுண்டுப் பறவைகள் பறந்தது போதும். இனியாவது சமாதானப் புறாக்களைப் பறக்கவிடு. 

தமிழர்களே, 

கல்வியால் உழைப்பால் உங்கள் வாழ்வை மேம்படுத்துங்கள் நாளை நம்முடையது. 

என்றார்.