(ஆர்.யசி)

ஆளத் தெரியாதவர்கள் ஆட்சியை கையில் எடுத்தால் நாடு சீரழியும் என்ற பழைய கருத்துக்கு அமைவாக இன்று ஆட்சி நடந்து வருகின்றது. அதற்கான தண்டனையை இன்று நாம் அனுபவித்து வருகின்றோம். எனவே, இந்த காலத்தில் மீண்டும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை மீட்டெடுக்க ஒருபோதும் பின்னிற்க மாட்டோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

Image result for Wijeyadasa Rajapakshe virakesari

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக அரசாங்கத்தில் பிரதான அமைச்சர்களின் மூலமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு பதிளிக்கும் வகையில் அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைக் குறிப்பிட்டார்.