தனது பிறப்புறுப்பில் துப்பாக்கியொன்றை கட்டி அதன் மூலம் தனது தலையில் சுட்டு நபரொருவர் விநோதமான தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஸ்பெயினின் முர்சியா நகரில் நேற்று  இடம்பெற்றள்ளது.

விடுமுறையைக் கழித்து விட்டு வீடு திரும்பிய அவருடன் தங்கியிருந்த  இரு நண்பர்கள், அவரது மூடப்பட்ட அறையிலிருந்து வித்தியாசமான துர்நாற்றம் வெளிப்படுவதை அவதானித்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார்  அந்நபரின்  அறைக் கதவை உடைத்து உள்ளே பிரவேசித்த போது அந்த அறையின் கட்டிலில் சுமார் 30 வயதுள்ள அவரது சடலம்  பிறப்புறுப்பில் துப்பாக்கியொன்று கட்டப்பட்ட நிலையில் நிர்வாணக் கோலத்தில் காணப்பட்டது.

மேற்படி மரணம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார் தெரிவிக்கையில்,  இதனை தற்கொலையென்றே தாம் கருதுவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.