பரீட்சைக்கு முதல் வினாத்தாள்கள் வெளியாகினவா??????

Published By: Digital Desk 7

20 Aug, 2017 | 01:21 PM
image

க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று நடைப்பெற்ற இரசாயன விஞ்ஞானம் பகுதி II இற்கான வினாக்கள் கம்பஹா மாவட்டத்தில் மேலதிக வகுப்பு நடாத்தும் ஆசிரியர் வழங்கிய கருத்தரங்கு கையேடுகளில் உள்ளடக்கப்பட்டிருந்தமை தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று நடைப்பெற்ற இரசாயன விஞ்ஞான பகுதி II பரீட்சை வினாத்தாள் முடிவடைந்து பரீட்சை நிலையத்தை விட்டு வெளியில் வந்த கம்பஹா பாடசாலை மாணவிகளுக்கு துண்டுப்பிரசுரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன .

பகிர்ந்தளிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தன்னால் ஏற்கனவே அனுமானிக்கப்பட்டு தொகுத்து வழங்கப்பட்ட 3 கேள்விகள் இம் முறை பரீட்சையில் கேட்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதல் கம்பஹா மாவட்டத்தில்  உயர் தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சட்ட விரோதமான செயல் எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இது தொடர்பாக கருத்து வெளியிடுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41