நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா - நேரடி ஒளிபரப்பு

Published By: Robert

20 Aug, 2017 | 10:24 AM
image

“சுற்றி நில்­லாதே பகையே, துள்ளி வரு­கு­துவேல்” என்­ப­தற்­க­மை­வாக தனிப்­பெ­ருங்­க­ட­வு­ளாக நின்று, அடி­யார்­க­ளுக்கு அரு­ள­முதை வழங்கிக் கொண்டு நல்­லை­யம்­ப­தியில் வீற்­றி­ருக்­கின்றார் கலி­யுக வர­தப்­பெ­ருமாளான முரு­கப்­பெ­ருமான். 

வர­லாற்றுப் பெரு­மையும், ஆன்­மிகச் சிறப்பும் கொண்­டது நல்லூர்ப் பிர­தேசம். தமிழ் மன்­னர்­களின் ஆட்­சிக்­கா­லத்­தின்­போது, நல்லூர் இரா­ச­தா­னி­யாக விளங்­கி­யது. சைவத்­தையும் தமி­ழையும் போற்றிப் பாது­காத்து வந்த ஆறு­மு­க­நா­வலர் போன்ற அறி­ஞர்கள், ஞானிகள், சித்­தர்கள் என்போர் பிறந்து, வாழ்ந்து, சிறப்­பித்த இட­மாக நல்­லை­யம்­பதி விளங்­கு­கின்­றது. செல்­லப்பா சுவா­மிகள் நல்லூர் தேர­டியில் வாழ்ந்­தவர். 

இவ­ரது சீட­ரான யோகர் சுவா­மிகள் அவர்­களும் நல்லூர் கந்­த­னு­டைய திரு­வருள் பெற்­றவர். நல்­லூ­ருக்குப் பெருமை சேர்க்கும் நாவலர் பெரு­மானின் நினைவு மண்­டபம், கலா­சார மண்­டபம் என்­பன நல்­லூரில் முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கு­கின்­றன. நல்லை நகர் திரு­ஞான சம்­பந்தர் ஆதீனம், திவ்ய ஜீவன சங்கம், துர்க்­கா­தேவி மணி­மண்­டபம், இந்து மாமன்றம் போன்ற சமய, கலா­சார மன்­றங்­களும், நல்­லூ­ருக்கு நற்­சி­றப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. 

இலங்கையில் அமைந்­துள்ள முருகன் ஆல­யங்­களுள் முதன்மை பெற்றுத் திகழும் நல்லைக் கந்தன் ஆலயம் ஆன்­மிகச் சிறப்­புகளை கொண்­டது. நல்­லை­யம்­ப­தி­யிலே இந்து ஆல­யங்கள் பல இருந்­தாலும் நல்லைக் கந்தன் ஆல­யத்­திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆறு­படை வீடு­க­ளிலே உறை­கின்ற முருகப் பெருமான் யாழ்ப்­பா­ணத்து நல்­லூ­ரிலே கோயில் கொண்­டெ­ழுந்­த­ருளி  அடி­ய­வர்­க­ளுக்­கெல்லாம் அரு­ள­முதை வழங்கிக் கொண்டு அர­சாட்சி செய்­கின்றார். இங்கு எழுந்­த­ரு­ளி­யி­ருக்கும் முரு­கப்­பெ­ருமான் அலங்­காரக் கந்­த­னாகப் போற்­றப்­ப­டு­கின்றார். முருகப் பெரு­மானின் அருட் பொலிவும், தெய்வ சாந்தி நித்­தி­யமும் நல்­லூரின் சிறப்­பு­க­ளுக்கு அணி செய்­வ­ன­வாக இருப்­பதைக் காணலாம். அழகே உரு­வான அலங்­காரக் கந்­த­னாக நல்­லை­யம்­ப­தி­யிலே எழுந்­த­ரு­ளி­யி­ருந்து, தன்னை விரும்பித் தொழு­ம­டி­யார்­க­ளுக்கு நல்­லருள் புரி­கின்றார். அழகன் முருகன் நல்­லை­யம்­ப­தியில் வீற்­றி­ருந்து எல்­லோ­ரையும் வாழ வைக்­கின்றான். மணிக்­கோ­பு­ரத்தின் மணி­யோசை ஆல­யத்தின் நாலா­பக்­கமும் ஒலிக்­கின்­றது. மணி­யோ­சையின் மூலம் அடி­யார்­களைத் தன்­வ­சப்­ப­டுத்தி அரு­ளாட்சி செய்­கின்றான். தமி­ழுக்கும் முரு­க­னுக்கும் நெருங்­கிய தொடர்பு உண்டு என்­பதைச் சாத்­தி­ரங்கள் கூறு­கின்­றன. இலக்­கிய நூல்­களில் கூறப்­ப­டு­கின்­றன. முருகன் என்றும் அழகும் இள­மையும் கொண்டு விளங்­கு­கின்றான். மாமு­னிவர் அகத்­தி­ய­ருக்கு தமிழ் உரைத்­தவன் முருகன். ஏனைய ஆல­யங்­க­ளுக்கு இல்­லாத பெரு­மை­களும் சிறப்­பு­களும் இவ்­வா­ல­யத்­திற்கும் இவ்­வா­ல­யத்தில் வீற்­றி­ருக்கும் அழ­குக்­கந்தன் முரு­க­னுக்கும் உண்டு எனலாம். 

வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க நல்லூர்க் கந்­த­சு­வாமி கோயிலின் இவ்­வ­ருட மகோற்­சவம் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­னது. இன்று 20ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை தேர்த்­தி­ரு­விழா வெகு­சி­றப்­பா­கவும் பக்தி பூர்­வ­மா­கவும் கோலா­க­ல­மா­கவும் நல்லையம்­ப­தியில் நடை­பெ­று­கின்­றது. தேர்த்­தி­ரு­வி­ழா­வன்று யாழ்­நகர் முழு­வ­துமே விழாக்­கோலம் பூண்­டி­ருக்கும். நல்லை நகர் வீதிகள் எல்லாம் விழாக்­கோலம் பூண்டு புனித நக­ர­மாகக் காட்­சி­ய­ளிக்கும். இன்­றைய தேர்த்­தி­ரு­வி­ழா­வன்று நல்­லைக்­கந்தன் தேரில்­வந்து அடி­யார்­க­ளுக்கு காட்­சி­கொ­டுக்­கின்ற காட்­சியை நேரில் கண்டு அருட்­க­டாட்­சத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக இலங்கைத் திரு­நாட்­டி­லி­ருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் நயி­னைம்­ப­தியில் கூடு­வார்கள். 

கைதான் தலைமேல் வைத்து கண்ணீர் ததும்பி, வெதும்பி கந்­தப்­பெ­ரு­மானை அடி­யார்கள் வழி­படும் காட்சி கண்­கொள்­ளாக்­காட்­சி­யாகும். 

முத்­த­மிழால் வைய­கத்­தா­ரையும் வாழ­வைக்­கின்ற முருகன் இன்று சித்­திரத் தேரிலே அழ­குத்­தி­ருக்­கோ­ல­மாக பவனி வரு­கின்ற காட்­சியைக் காண கண்கள் கோடி வேண்டும். அதி­கா­லை­யிலே பூசைகள், அபி­ஷே­கங்கள், வசந்த மண்­டப பூஜைகள் முத­லி­யன காலக் கிர­மம் தவ­றாது நிறை­வேற்­றப்­பட்ட பின்னர், ஆல­யத்தின் அசையா மணிகள் ஆறும் ஒருங்கே ஒலிக்க முருகப் பெருமான் தேரேறி வீதி­யுலா வரு­வ­தற்குப் புறப்­ப­டுவார். சித்­தி­ர­வே­லைப்­பா­டு­க­ளுடன் கூடிய அழ­கிய திருத்­தேரில் ஆறு­முகப் பெருமான், கஜ­வல்லி, மகா­வள்ளி சமே­த­ர­ராக எழுந்­த­ருளி வீதி­யுலா வந்து அடி­யார்­க­ளுக்கு அருள்­பு­ரி­கின்ற காட்­சியைக் கண்­ணாரக் கண்டு நேரில் தரி­சனம் செய்ய வேண்டும். 

பஜனைக் கோஷ்­டிகள் ஒரு­புறம், காவ­டிகள் ஒரு புறம், தூக்குக் காவ­டிகள் ஒரு­புறம், கற்­பூரச் சட்­டிகள் ஏந்தும் பெண்கள் ஒரு­புறம். இப்­ப­டி­யாக அடி­யார்கள் பக்திக் கோலத்­துடன் தேர் வீதி­யுலா வரும்­போது, தேருடன் வரு­வதை அற்­புதக் காட்சி எனலாம். அடி­யார்கள் ‘அரோ­கரா’, ‘அரோ­கரா’ எனவும், 'முருகா ஓம் முருகா' எனவும் முரு­கனின் புகழ்­பாடி வரு­கின்ற காட்சி தெய்­வீகக் காட்­சி­யாகும். நல்லூர் கந்­தனின் தேர்­வ­டம்­பி­டித்தால் மிகப் பெரும் புண்­ணியமாகும். 

வடம்­பி­டித்­த­வர்கள் முரு­கப்­பெ­ரு­மானின் திரு­வ­டியில் இடம்­பி­டித்­த­வர்கள். இதனால் அடி­யார்கள் தேர் வடம்­பி­டிப்­ப­தற்­காக முந்திக் கொள்­வதை நான்கு வீதி­க­ளிலும் காணலாம். தேரில் உலா­வரும் ஆறு­முகப் பெரு­மானை ஒரு­மு­றை­யா­வது கண்­ணா­ரக்­கண்டு தொழ அடி­யார்கள் முந்­திக்­கொள்­வதை வீதிகள் எங்­கணும் காணலாம். “யாம் இருக்கப் பயமேன்” என்று அப­ய­ம­ளித்து நம்மைக் காப்­பவன் ஆறு­முகப் பெரு­மா­னல்­லவா நல்­லை­யம்­ப­தியில் அருள் மழை பொழி­கின்றார்.

மற்­றைய இடங்­க­ளுக்கு இல்­லாத தனிச்­சி­றப்பு நல்லூர்த் தேர­டிக்கு மட்டும் உண்டு. தனிச்­சி­றப்பு எவ்­வாறு நல்லூர்த் தேர­டிக்கு வந்­த­தென்­பதை நோக்­கு­மி­டத்து செல்­லப்பா சுவா­மிகள், யோகர் சுவா­மிகள் போன்ற பெரு­மைக்­கு­ரிய பெரி­யார்கள் நல்லூர்த் தேர­டியில் வாழ்ந்­த­மைதான் கார­ண­மாகும். பெரி­யார்­க­ளு­டைய திரு­வ­டிகள் பதிந்த இடம் நல்லூர்த் தேர­டி­யாகும். இன்றும் நல்லூர்த் தேர­டியில் அரு­ளலை வீசிக்­கொண்­டே­யி­ருக்­கி­றது. பல சிவ­ன­டி­யார்கள் நல்லூர்த் தேர­டியில் அனுதினமும் ஒன்றுகூடி நற்சிந்தனைப் பாடல்கள், திருவாசகம், கந்தபுராணம், திருப்புகழ் பாடல்கள் போன்றவற்றைப் பாடிவருகின்றனர். அடியார்கள் இவற்றைக் கேட்டுப் பக்தியில் உறைகின்றனர். 

தேர் வீதிவலம் வந்தபின்னர் சண்முகப் பெருமானுக்குப் பச்சைச்சாத்தி, தேரிலிருந்து ஆலயத்துக்குத் திரும்புவார். பச்சை நிற ஆடைகள் அணிவித்து, பச்சை நிற அலங்காரம் செய்து, அலங்காரக் கந்தனாக வருகின்ற காட்சி பக்தர்களின் மனதை உருக்கும் அற்புதக் காட்சியாக இருக்கும். 

இத்தனை சிறப்புகள் பொருந்திய அருட்காட்சிகளை நல்லையம்பதியில் அடியார்கள் காண்பதற்கு பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். 

நல்லூர் கந்தன் வீதியுலா வருவதை எமது வீரகேசரி இணையதளத்தில் காணலாம்.

மஹோற்சவப் பெருவிழாவின் இரதோற்சவம் - நேரலை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21