பொரலஸ்கமுவ பில்லேவ விகாரைக்கு அருகில் கொழும்பிலிருந்து சென்ற பஸ் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிக வேகத்தினால் சென்ற பஸ்ஸானது கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டுள்ளது.இவ் விபத்தில் 4 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் களுபோவில வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்  மற்றைய  இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.