அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், நபர் ஒருவர் இங்கிரிய - ஹதபான்கொடை பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

Image result for துப்பாக்கியுடன் ஒருவர் கைது virakesari

இக்கைதுச் சம்பவம், நேற்று முன்னதினம் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர், ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சந்தேக நபர் ஹதபான்கொடை பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.