2018ஆம் ஆண்டு இலங்கைக் கடற்­ப­ரப்­பிற்குள் வருகை தர­வுள்ள புதிய நோர்­வே­ஜிய ஆராய்ச்சி கப்­ப­லான பிரிட்டோவ் நன்சன் (M/V Dr. Fridtjof Nansen)  இலங்­கையின் கடல்­வ­ளங்கள் தொடர்­பான மதிப்­பீ­டு­களை மேற்­கொள்­ள­வுள்­ளது. அதற்­கான தயா­ரிப்பு கருத்­த­ரங்கு தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. இலங்கை மற்றும் நோர்­வே  மீன்­பி­டித்­துறை அமைச்­சுக்­க­ளுக்­கி­டை­யி­லான தொழில்­நுட்ப மற்றும் நிறு­வன ஒத்­து­ழைப்பின் பகு­தி­யாக நடை­பெறும் இச்­செ­யற்­பாட்­டுக்­கான அங்­கீ­காரம் இரு­நா­டு­க­ளதும் உயர் அர­சியல் தலை­மை­க­ளி­ட­மி­ருந்து கிடைத்­துள்­ளது.

கடல் வளங்­களின் தற்­போ­தைய நிலை, மீன்­வ­ளத்தின் இருப்பு, கண்ட மேடைகள் மற்றும் சாய்­வு­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டா­த, ­கு­றை­வாகப் பயன்­ப­டுத்­தப்­படும் மீன்­வ­ளங்­களை விசா­ரணை செய்தல் ஆகி­யவை இம் மதிப்­பீட்டின் நோக்­கங்­க­ளாகும். இலங்­கையில் இவ்­வா­றான இருப்பு மதிப்­பீடு 1978 முதல் 1980 வரை­யான காலப்­ப­கு­தியில் இதற்கு முந்­தைய பிரிட்டோவ் நன்சன் ஆராய்ச்சிக் கப்­பலால் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அபி­வி­ருத்தி ஒத்­து­ழைப்­புக்­கான நோர்­வே­ஜிய செய­லாண்­மைக்குச்  (Norwegian Agency for Development Cooporation - NORAD)  சொந்­த­மான இந்தப் புதிய கட­லா­ராய்ச்சிக் கப்­ப­லான பிரிட்டோவ் நன்சன் அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடுகள் மீன்­பிடி முகா­மைத்­து­வத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு உதவும் நோக்கில் நோர்­வே­ஜிய கட­லா­ராய்ச்சி நிறு­வனம் (Institute of Marine Research in Norway - IMR), உணவு மற்றும் விவ­சாய நிறு­வனம் (Food and Agriculture Organisation - FAO)  ஆகி­ய­வற்றால் இணைந்து இயக்­கப்­ப­டு­கி­றது.

வங்­காள விரி­கு­டா­விற்குள் இக்­கப்­பலின் வரு­கையை திட்­ட­மிட்டு இற்­றைப்­ப­டுத்தும் நிகழ்வை அங்­கீ­க­ரிக்கும் நிகழ்வில் கருத்­து­ரைத்த இலங்கை மற்றும் மாலை­தீ­வுக்­கான நோர்­வே­ஜியத் தூதுவர் தூர்­பியோன் கவு­ஸத்­சேத்த இப்­பு­திய ஆராய்ச்சிக் கப்­ப­லா­னது அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களில் உயிர்ப்­பல்­வ­கை­மையை மையப்­ப­டுத்­திய கடல் முகா­மைத்­து­வத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான நோர்­வே­ஜிய உத­வித்­திட்­டத்தை அடுத்த கட்­டத்­திற்கு நகர்த்­து­வதை வாய்ப்­பாக்கும் என்று தெரிவித்தார். 

மேலும் இது நோர்வேயின் புதிய சமுத்திர மூலோபாயத்தின் பகுதியாகும் என்பதோடு இச்செயற்பாடானது துறைசார் எல்லைகளைத் தாண்டியும் சர்வதேச எல்லைகள் கடந்தும் அறிவுப் பகிர்வை அதிகரிப்பதனால் நோர்வே இதை சமுத்திரங்களுக்கான கூட்டுப் பங்காண்மையாகக் கருதுகிறது என்றார்.