வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் 50 ஆயிரம் நிரந்­த­ர­மான கல்­வீ­டு­களை  அமைப்­ப­தற்கு அமைச்­ச­ர­வை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இந்த வீடு­களை அமைக்கும் நட­வ­டிக்கை விரைவில்  ஆரம்­ப­மாகும் என்று அறி­விக்­கப்­பட்­ டுள்­ளது. 

இது குறித்து  தேசிய ஒருங்­கி­ணைப்­ புக்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அமைச்சின்  செய­லாளர்  வே. சிவ­ஞா­ன­சோதி  விடுத்­திள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

30 வருட யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மக்­க­ளுக்கு நிரந்­த­ர­மான கல்­வீ­டு­க­ளை­வ­ழங்­கு­வ­தற்­காக அமைச்­ச­ரவைப் பத்­திரம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் முன்­வைக்­கப்­பட்டு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் பெறப்­பட்­டுள்­ளது. இந்த நிரந்­த­ர­மான கல் வீட்­டுத்­திட்டம் தொடர்­பான கேள்வி கோரல்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன் அதற்­கான நிதிப்­ப­டுத்­த­லுடன் இணைந்த கேள்வி கோர­லாக இத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது நிரந்­த­ர­மான நல்­லி­ணக்கச் செயற்­பா­டாக நோக்­கு­கின்­றது.  

இத்­திட்­டத்தின் கேள்வி மனு­கோ­ரல்கள் தொடர்­பான வேலைத்­திட்­டங்கள் தேசிய ஒருங்­கி­ணைப்­புக்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அமைச்­சினால் ஏனைய அமைச்­சுக்­க­ளையும் நிறு­வ­னங்­க­ளையும் இணைத்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. தேசிய ஒருங்­கி­ணைப்­புக்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அமைச்சின் அமைச்­ச­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­ப­டு­கின்றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வீட்­டுத்­திட்­டங்­க­ளுக்­கான தேவைப்­பா­டு­களும் திட்ட தயா­ரிப்பும் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் அபி­வி­ருத்தி குழுவின் வழி­காட்­டலின் கீழ் தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு பிரதமர் தலைமையிலானபொருளாதார முகாமைத்துவத்திற்கானஅமைச்சரவை குழுவின் சிபார்சுடன்  அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.