நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவரேலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு எச்சரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்கூறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.