23 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபற்றும் அணிக்கு மூவர் கொண்ட சர்வதேச கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இரத்மலானை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வெளியரங்கில் இன்று   ஆரம்பமாகின.

இப்போட்டிகளில் இலங்கை, உக்ரைன், செக் குடியரசு, நெதர்லாந்து, ஹங்கேரி, ஸ்லோவேனியா, ஜோர்தான் ஆகிய 7 நாடுகள் பங்குபற்றுகின்றன.

விசா அனுமதி கிடைக்காததால் உகண்டா இப்போட்டிகளில் இருந்து விலகியுள்ளது.

மூவர் கூடைப்பந்தாட்டப் போட்டிகள் சர்வதேச அளவில் பிரபலமாகி வருகிறது. இலங்கையிலும் பாடசாலைகள் மத்தியில் இவ்விளையாட்டை பிரபல்யமடைச் செய்யும் நோக்கிலேயே இப்போட்டியை இலங்கையில் நடத்த முன்வந்ததாக இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத் தலைவர் பிரிகேடியர் இந்துனில் ரணசிங்க தெரிவித்தார்.