(ஆர்.யசி)

சிங்கள பௌத்த பெரும்பான்மையினர் மட்டுமல்லாது தமிழ் முஸ்லிம் மக்களும் சம உரிமைகளை பெற்று வாழவேண்டும் என நினைக்கும் ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கவேயாவர். புதிய அரசியல் அமைப்பின் மூலமாக சகல இன ஒற்றுமையையும் உறுதிப்படுத்த முயற்சிக்கின்றார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.  புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தை எழுதிக்  கொடுத்திருந்தால் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி ஆகியிருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல் பயணத்தை வெளிபடுத்தும் வகையிலான "தொலை நோக்குடன் ரணில்" எனும் புகைப்பட கண்காட்சி இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்தார்.