பலத்த எதிர்ப்­பு­க­ளுக்­கி­டையே கொடைக் ­கானல் திரு­மண பதி­வாளர் அலு­வ­ல­கத்தில் நேற்று இரோம் சர்­மிளா திரு­மணம் நடை­பெற்­றது.

மணிப்பூர் மாநி­லத்தில் ஆயுத சட்­டத்­துக்கு எதி­ராக போரா­டி­யவர் இரோம் சர்­மிளா. அதன் பிறகு தனது போராட்­டத்தை கைவிட்டு சட்­ட­சபை தேர்­தலில் போட்­டி­யிட்டார். ஆனால் தேர்­தலில் தோல்­வி­ய­டை­யவே பொது வாழ்வில் இருந்து விடு­ப­டப்­போ­வ­தாக கூறி கடந்த 3 மாத­மாக கொடைக்­கா­னலில் தங்­கி­யுள்ளார். 

அவர் லண்­டனைச் சேர்ந்த தேஸ்மந்த் கொட்­டின்கோ என்­ப­வரை திரு­மணம் செய்ய முடிவு செய்து கொடைக்­கானல் திருமணப் பதி­வாளர் அலு­வ­ல­கத்தில் மனு அளித்­தனர்.

இவர்­க­ளது திரு­ம­ணத்தை கொடைக்­கா­னலில் நடத்­தக்­கூ­டாது என்று இந்து மக்கள் கட்சி, உழவர் உழைப்­பாளர் மற்றும் பல்­வேறு அமைப்­பினர் எதிர்ப்புத் தெரி­வித்­தனர். ஆயினும் தனி நபர் திரு­மண சட்­டத்தின் கீழ் உரிய விளக்கம் அளிக்க மறுத்­ததால் அனைத்து ஆட்­சே­ப மனுக்­களும் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து இரோம் சர்­மிளா திரு­மணம் நடை­பெ­று­வது உறுதிசெய்­யப்­பட்­டது. நேற்று  பதி­வாளர் அலு­வ­ல­கத்தில் பதிவுத் திரு­மணம் செய்து கொண்­டனர்.