இறு­தி­யாக இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் போது பொது­வேட்­பா­ளராக யாரை நிறுத்­து­வது என்ற நெருக்­கடி சூழல் உரு­வா­னது. அத்­த­ரு­ணத்தில் அனை­வ­ருமே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பெய­ரையே பரிந்­து­ரைத்­தார்கள். இருப்­பினும் நானே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பெயரை நம்­பிக்­கையின் பேரில் பரிந்­து­ரைத்தேன் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அப்­போ­தைய விட்­டுக்­கொ­டுப்பே நாம் எதிர்­கொண்ட கடு­மை­யான இலக்­கினை இல­குவில் அடை­வ­தற்­கான ஆரம்­பப் ­புள்­ளி­யாக அமைந்­தது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நாற்­பது ஆண்­டு­கால அர­சியல் பய­ணத்தின் முக்­கி­ய­மான சந்­தர்ப்­பங்­களை சித்­தி­ரிக்கும் ரணிலின் தொலை­நோக்கு எனும் புகைப்­பட கண்­காட்சி நேற்று வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில் கலந்து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ளராக யாரை நிறுத்­து­வது என்­பது தொடர்பில் பெரு­ம­ளவில் சிந்­திக்க வேண்­டி­யேற்­பட்­டது. அவ்­வா­றா­ன­தொரு நெருக்­க­டி­யான சூழ்­நி­லையில் அப்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்கு பரிந்­து­ரைத்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­விடம் நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு அப்­போது ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சி யின் செய­லா­ள­ராக செயற்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொருத்­த­மா­னவர் என்றேன். அதற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்­னிடம் அவர் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வ­ரா­ன­வரா என கேள்வி எழுப்­பினார். அதற்கு நான் அவர் எனக்கு அறிந்த வகையில் மிகுந்த நம்­பிக்­கைக்­கு­ரி­யவர் என்றேன். உடனே பிர­தமர் இந்த தீர்­மா­னத்தை நாளை நான் கட்­சியின் முன்­னி­லையில் அறி­விக்­கின்றேன் என்றார்.

மறுநாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தேர்தல் களத் தில் இறங்­குவார் என எதிர்­பார்த்­தி­ருந்த நிலையில் அவர் பொது வேட்­பாளராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன களம் இறங்­குவார் என்ற தீர்மானத்தை பகிரங்க மாக அறிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அப்போது அந்த தீர்மானத்தை இலகு வில் ஏற்றுக்கொண்டதும் அவருடைய விட் டுக்கொடுப்பின் விளைவாகவே நாம் எதிர் கொண்ட கடுமையான இலக்கை இலகுவில் எட்ட முடிந்தது. நல்லாட்சியும் இரு கட்சிக ளுடனான புரிந்துணர்வுடன் ஏற்படுத்தப் பட்டது என்றார்.