வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் நேற்று இரவு 7 மணி முதல்  7.45 மணிவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஐ.நா. அலுவலக விசேட பணியாளர் சோமஸ், தாயக தாய்மார், வவுனியா பிரஜைகள் குழு தலைவர் கோ.ராஜ்குமார் ஆகியோருடன் சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் இருக்கும் காணாமலாக்கப்பட்ட பெண்பிள்ளைகள் சம்பந்தமாவும், எவ்வாறு உங்களது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை பெற்றுக்கொண்டார்கள்.

நாங்கள் அரசாங்கத்திற்கு இதுவரையில் அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு முறையான திட்டங்களை நாங்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் இதற்கு தீர்வினை பெற்றுத்தருவோம் என தெரிவித்தார்.

இன்றுடன் 175 ஆவது நாட்களாக வீதியில் தங்களது பிள்ளைகளைத் தேடி சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கும் தமது போராட்டத்திற்கு தீர்வு எப்போது கிடைக்கும் என வானத்தை அண்ணார்ந்து பார்த்த வர்ணமுள்ளனர்.