இந்­தியா, சீனா, பங்­களாதேஷ் போன்ற உலக பல­வான்­க­ளான நாடு­களின் விளை­யாட்டு கள­மாக இலங்­கையை மாற்ற அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­ற­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார்.

நேற்று காலி நக­ர­ சபை மண்­ட­பத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

Image result for விமல் வீர­வன்ச virakesari

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா உள்­ளிட்ட உலக பல­வான்­க­ளாக இருக்­கின்ற நாடு­க­ளுடன் இணைந்து தற்­போ­தைய அர­சாங்கம் இந்த நாட்டை மேற்­படி பல­மிக்க நாடு­களின் விளை­யாட்­டுக்­ கள­மாக மாற்­றி­வி­டு­வ­தற்­கான முனைப்­புக்­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. 

அதன் முன்­னோடிச் செயற்­பா­டாகத் தான்  அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­விற்கு கைய­ளித்­தி­ருந்­தது. தற்­போது மத்­தள விமான நிலை­யத்­தி­னையும் தற்­போது இந்­தி­யா­விற்கு கைய­ளிக்க முற்­ப­டு­கின்­றார்கள். இதனால் எதி­ர்­கால சந்­த­தி­யினர் பெரும் நெருக்­க­டி­க­ளுக்கு முகம்­ கொ­டுக்க நேரிடும் என்­பதை நாம் முன்­கூட்­டியே எச்­ச­ரிக்­கின்றோம். அம்­பாந்­தோட்டை துறை­முகத்தை நிர்­மா­ணிக்க மொத்தம் 1670 அமெ­ரிக்க டொலர்கள் செல­வா­னது. அதில் 500 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை துறை­முக அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யினர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே செலுத்­தி­விட்­டனர்.

தற்­போது 1170 அமெ­ரிக்க டொலர்­களை மாத்­தி­ரமே செலுத்­த ­வேண்­டி­யுள்­ளது. அதனை 20 வரு­டத்தில் செலுத்தி முடித்­து­விட முடியும். அதற்­காக வரு­டாந்தம் 95 அமெ­ரிக்க டொலர்­களை மாத்­திரம் செலுத்­தினால் போது­மா­ன­தாகும்.

ஒரு வரு­டத்­திற்கு இந்த தொகையினை செலுத்த முடி­யாத அள­விற்கு அர­சாங் கம் மட்­ட­மா­கி­யுள்­ளது என்பதே இதன் வெளிப்பாடாகும்.  அரசாங்கம் இவ்வா றான நிலையில் இருந்தாலும் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையை வருமானம் ஈட்டும் நிறுவனம் என்பதை அவர்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.