முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை நாட்களில் மாற்றம்

Published By: Robert

18 Aug, 2017 | 10:24 AM
image

ஹஜ் பெரு­நாளை முன்­னிட்டு சகல அரச முஸ்லிம் பாட­சா­லை­க­ளி­னதும் இரண்டாம் தவணை விடு­முறை நாட்­களில் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாட­சாலை அபி­வி­ருத்திப் பிரிவின் சிரேஷ்ட பணிப்­பாளர் இஸட். தாஜுடீன் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஹஜ் பெரு­நாளை முன்­னிட்டு முஸ்லிம் பாட­சாலை மாண­வர்­களின் நலன்­க­ருதி முஸ்லிம் பாட­சா­லை­களின் இரண்டாம் தவணை விடு­முறை நாட்­களில் மாற்றம் செய்­யு­மாறு முஸ்லிம் கல்விச் சமூகம்  மற்றும் முஸ்லிம் பாட­சாலை அதி­பர்கள் உட்­பட பல்­வேறு தரப்­புக்­க­ளி­ட­மி­ருந்தும் கல்வி அமைச்­சிடம் விடுத்த வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இவ்­வேண்­டு­கோள்­களைப் பரி­சீ­லனை செய்த அமைச்சு மாண­வர்­களின் நலன் கருதி இம்­மாற்­றத்­திற்­கான அனு­ம­தி­யினை வழங்­கி­யுள்­ளது. 

அமைச்சின் செய­லா­ள­ரினால் இவ்­வ­னு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்பில் சகல மாகாணக் கல்விப் பணிப்­பா­ளர்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­த­தோடு இம்­மாற்­ற­மா­னது பின்­வ­ரு­மாறு அமை­யப்­பெற்­றுள்­ள­தா­கவும் பணிப்­பாளர் குறிப்­பிட்­டார்.

இரண்டாம் தவணை விடு­மு­றை­யா­னது இன்று வெள்ளிக்கிழமை பாட­சாலைக் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுடன் வழங்­கப்­பட்டு மூன்றாம் தவணை கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஆகஸ்ட் 28 ஆம் திகதி பாட­சா­லைகள் திறக்­கப்­ப­ட­வி­ருந்­தன.

இருப்­பினும், அவ்­வாறு குறித்த தினங்­களில் பாட­சா­லை­களை மூடாது, ஆகஸ்ட் 21ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை­யான நாட்­களில் தொடர்ச்­சி­யாக பாட­சாலை கல்வி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து, ஆகஸ்ட் 31 மற்றும் செப்­டெம்பர் 4,6,7 மற்றும் 8ஆம் திகதி ஆகிய 5 நாட்­க­ளுக்கு சகல முஸ்லிம் பாட­சா­லை­க­ளையும் மூடு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­ட­டுள்­ளது.

இதன்­படி சகல முஸ்லிம் பாட­சா­லை­களும் 5 நாட்கள் விடு­மு­றை­யுடன் மூன்றாம் தவணை கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக செப்­டம்பர் 11ஆம் திகதி திறக்கப்படுமென  பணிப்பாளர். குறிப்பிட்டார். அத்தோடு, இவ்வாண்டுக்கான முஸ்லிம் பாடசாலை களுக்கான மொத்த பாடசாலை நாட்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21