அர­சாங்­கத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து கொழும்பில் இன்று கண்­டனப் பேரணி

Published By: Robert

18 Aug, 2017 | 09:05 AM
image

அர­சாங்­கத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து கூட்டு எதிர்க்­கட்சி இன்று  மாலை கொழும்பில் கண்­டனப் பேர­ணி­யொன்றை நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­செய்­துள்­ளது.  குறித்த கண்­டனப் பேர­ணியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின்  முன்னாள் பிர­தி­நி­திகள் உட்­பட பெருந்­தி­ர­ளானோர் கலந்து கொள்­ள­வுள்­ள­தாக கூட்டு எதிர்க்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

Image result for கண்­டனப் பேரணி virakesari

 இக்­கண்­டனப் பேர­ணியில் வடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­லி­ருந்தும் கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ர­வா­ளர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். அதற்­கான ஏற்­பா­டுகள் கூட்டு எதிர்க்­கட்­சியின் மாவட்ட அமைப்­பா­ளர்­க­ளூ­டாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

 இன்று கொழும்பில் கூட­வுள்ள கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ர­வா­ளர்கள் பி.பி.4 மணி­ய­ளவில் இப்­பன்­வெல சந்­தி­யி­ருந்து லிப்டன் சுற்­று­வட்­டத்­தி­னூ­டாக நரக மண்­டபப் பிர­தே­சத்­திற்கு பேர­ணி­யாகச் சென்று நகர மண்­ட­பத்­திற்கு அருகில் அமை­தி­யான முறையில் எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

தேசிய வளங்­களை சர்­வ­தேச மயப்­ப­டுத்தல், விவ­சா­யிகள், பண்ணை வளர்ப்­பா­ளர்கள், வர்த்­தகம் உட்­பட சகல துறை­க­ளிலும் ஏற்­பட்­டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­காமை, மாண­வர்கள், தொழிற்­சங்கப் பிர­தி­நி­திகள் முன்­னெ­டுக்கும் ஜன­நா­யக ரீதி­யி­லான போராட்­டங்­களை அர­சாங்கம் அடக்­கு­மு­றை­யூ­டாக முடக்க முற்­ப­டு­கின்­றமை, சட்டம் நீதி, மற்றும் நிதித்துறைகளில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளமை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த கண்டனப் பேரணி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்ததக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01