இலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள விஷேட தேவையுடைய  குழந்தைகளின் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 23ஆம் திகதி 6.30 மணியளவில் கொழும்பு 7 இல் அமைந்துள்ள லயனல் வென்டட் மெமோரியல் திரையரங்கில் இந்தியாவிற்கான இலங்கையில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையின் கீழ் இடம்பெறவுள்ளது.

விஷேட தேவையுடைய குழந்தைகளின் “ஜொனதன் லிவிங்ஸ்டன் செய்குல்” எனும் இசை நிகழ்ச்சியை ஷங்கர் பவுன்டேஷன் மற்றும் இந்தியாவின் கூட்டிணைப்பு நிறுவனமான சுனேரா பவுன்டேஷனும் இணைந்து இந்தியாவிற்கான இலங்கையில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையோடு வழங்குகிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஷங்கர் பவுன்டேஷன் என்.ஜி.ஒ நிறுவனமாகும். இந் நிறுவனத்தினூடாக மனிதனது உடல் உள நல அபிவிருத்திகள் விஷேட தேவைகளையுடைய குழந்தைகளுக்கான சிகிச்சை கல்வி உள நலத்திட்டங்கள் மனித உரிமைகள் மனித வள மேம்பாடு போன்ற பலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

சுனேரா பவுன்டேஷன்  இலங்கையில்  2500க்கும் மேற்பட்ட இளம் ஊனமுற்றவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கவுள்ளது. 2000 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந் நிறுவனம் தனி மனித அபிவிருத்திக்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. இசை, நடனம், நாடகம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் இந் நிறுவனத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பயிற்சி பட்டறைகளில் கலந்து பயன் பெற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கிறது.