பாதுகாப்புப் படையின் பிரதானி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை இன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பில் கடற்படைக்குரிய பாரம்பரிய வரவேற்பு மரியாதையுடன் பாதுகாப்பு படையின் பிரதானியை கடற்படை தளபதி வரவேற்றார்.

அங்கு கடற்படைத் தளபதி பாதுகாப்பு படை பிரதானிக்கு வாழ்த்துக்களையும் நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி கௌரவித்துள்ளார்.

இதன் பிறகு இரு தரப்பு சார்ந்த முக்கிய விடயங்களில் சுமுகமான விவதாங்களில் ஈடுப்பட்டுமுள்ளனர்.

இச் சந்திப்பில் கடற்படை பிரதி ஜெனரல்கள் மற்றும் கடற்படை தலைமையகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.