இன்றைய திகதியில் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றாக ஏராளமான மாற்று மருத்துவ சிகிச்சை முறைகள் அறிமுகமாகி, பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் மெட்டலோதெரபி எனப்படும் செம்பிலான சிகிச்சை முறையும் பிரபலமாகி வருகிறது.

செம்பிலான நாணயங்கள் அல்லது தகடுகளை பயன்படுத்தி எம்முடைய உடலிலுள்ள நோய்க் காரணிகளை குணப்படுத்தும் சிகிச்சைக்கு தான் மெட்டலோதெரபி என்று குறிப்பிடப்படுகிறது.

இதன்போது, செம்பு நாணயங்களை பட்டைத் தீட்டியோ அல்லது துளையிட்டோ பயன்படுத்தினால் கூடுதலாக நன்மைக் கிட்டும். சிகிச்சைக்கு பயன்படுத்தும் முன்னர் 10 அல்லது 20 நிமிடங்கள் வரை செம்பினை சூடாக்கி கொள்ளவேண்டும். பின்னர் அவற்றை ஆறபோடவேண்டும். ஆறிய பின்னர் உப்புத்தாளைக் கொண்டு நன்றாக தேய்க்கவேண்டும். இதன் காரணமாக செம்பு கசியத் தொடங்கும். இதனையடுத்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு சோடியம் குளோரைடு கலந்த கரைசலில் ஒரு மணித்தியாலம் வரை ஊறவைக்கவேண்டும். அதனையடுத்து அந்த செம்பினை எடுத்து எம்முடைய உடலில் நோய் பாதித்த இடங்களில் வைத்து 15 நிமிடங்கள் வரை சிகிச்சையளித்தால், செம்பினால் தீரக்கூடிய அனைத்து நோய்களும் குணமடையும். ஒரு சிலருக்கு 15 நாள் வரை இவ்வகையினதான சிகிச்சையை தொடரவேண்டியதிருக்கும்.

செம்பு என்ற இந்த உலோகம் ஒரு வலிமையான ஆன்ட்டி பாக்ட்ரீயல் சக்தி கொண்டது. இரத்த கசிவை உடனடியான நிறுத்தும் சக்தி இதற்கு உண்டு. காய்ச்சலையும், தீராத வலிகளையும் தீர்க்கவும் இது உதவுகிறது. நரம்பு மண்டலத்தின் இயக்கத்தினை சீராக வைத்துக் கொள்ளவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இது பயனளிக்கிறது. கணையத்தில் சுரக்கும் இன்சுலீன் சுரப்பியின் செயல்பாட்டில் சமச்சீரின்மையை களைந்து, அதனை கட்டுப்படுத்தி தோலில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாவண்ணம் காக்கிறது. 

வைத்தியர். அண்ணாத்துரை, காந்த சிகிச்சை நிபுணர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்