வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் திருக்குறளை இடம்பெற வைத்ததற்காக பெற்றோர்களின் தரப்பிலிருந்து தனுஷ_க்கு பாராட்டுகள் குவிகிறது. இது குறித்த விளக்கமளித்த போது,‘ இந்த படத்தில் திருக்குறளை வேண்டும் என்றேத்தான் இடம்பெற வைத்தேன். நேர்மறையான விளைவுகள் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தில் நான் வைத்திருப்பதை பலரும் பாராட்டினார்கள். அவர்கள் திருக்குறளுக்கு விளக்கமும் சொல்லியிருக்கலாமே? என்று எம்மை கேட்டனர். இயக்குநர் சௌந்தர்யா கூட கேட்டார். ஆனால் அதை நான் உறுதியாக மறுத்தேன். ஏனெனில் தற்போது இப்படத்தைப் பார்த்துவிட்டு, சௌந்தர்யா உட்பட பலரும் திருக்குறள் புத்தகத்தை வாங்கி அதற்கான விளக்கத்தைப் படித்து தெரிந்துகொண்டிருக்கிறார்கள்’ என்றார்.

படம் வெளியான பின்பு எமக்கு தெரிந்த நட்பு வட்டாரத்தில் பலரும் திருக்குறளை வாங்கி படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது ஒரு நல்ல நேர்மறையான அதிர்வை ஏற்படுத்தும என்று நம்புகிறேன்‘ என்றார் தனுஷ்.

தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு தூதுவராகயிருக்கும் தனுஷை ஏராளமானவர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இறுதியாக ஒரு விடயம் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் பெரிய அளவில் வெற்றிப் பெற்று வெளியான 5 நாட்களில் தமிழில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருக்கிறார். நாமும் நம்புவோம்.

தகவல் : சென்னை அலுவலகம்