டொமினிக் குடி­ய­ர­சி­லி­ருந்து மியா­மியை நோக்கிப் பய­ணித்த  அமெ­ரிக்கன் எயார்வேய்ஸ் விமா­னத்தின்  முன் சக்­க­ரங்­க­ளுக்கு இடை­யி­லுள்ள இடைவெளியில் –-65  பாகை பரனைட் அள­வான உறைய வைக்கும் குளிரில் மறைந்­தி­ருந்து  ஒரு மணித்­தி­யா­லத்­துக்கும்  அதி­க­மான நேரம் உயி­ரா­பத்­தான பய­ணத்தை மேற்­கொண்ட  குடி­யேற்­ற­வா­சி­யொ­ருவர் அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் தப்­பி­யுள்ளார்.

 கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. டொமினிக் குடி­ய­ரசைச் சேர்ந்­த­வ­ரான  அந்த நபர், அமெ­ரிக்கன் எயார்வேய்ஸ் எயார்பஸ் ஏ 321  விமா­னத்தின் முன் சக்­கரப் பகு­தி­யி­லேயே இவ்­வாறு மறைந்­தி­ருந்து பயணம் செய்­துள்ளார்.

அந்த விமானம் புறப்­பட்டு 15  நிமி­டங்­களில் 22,000  அடி உய­ரத்தைக் கடந்­த­துடன்  அரை மணி நேரத்தில் 34,000  அடி உய­ரத்தை அடைந்­தது. மேற்­படி உய­ரத்தில் விமா­னத்தின் உள்ளே வெப்­ப­நி­லையும் அமுக்

­கமும்  முறை­யாகப் பேணப்­ப­டு­கின்ற நிலை யில்,  வெளிப்­ப­கு­தி­யி­லான வெப்­ப­நிலை உயி­ரா­பத்து விளை­விக்கக் கூடி­ய­ளவில் மிகவும் குறை­வாக  உள்­ள­துடன் .  ஒட்சிசன்  வாயுவின் அளவும்  காற்றழுத்தத்தின்  மிகவும் தாழ்ந்த மட்டத்தில் உள்ளமை குறிப்பி டத்தக்கது.

இந்த நிலையில் விமானத்தின் முன் சக்கரப் பகுதியிலுள்ள வெப்பமான குழாய் களிலிருந்து வெளிப்பட்ட வெப்பம் காரண மாகவே  அவர் உயிர் தப்ப முடிந்ததாக நம்பப்படுகிறது.

மியாமியில் விமானம் தரையிறங்கியதும்   அந்நபர் பிராந்திய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி அவர் எவ்வாறு  டொமினிக் குடியரசிலுள்ள லாஸ் அமெரிகாஸ் சர்வதேச விமான நிலையத்தில்  புறப்படுவதற்கு தயாராக தரித்திருந்த அந்த

விமானத்தின்  முன் சக்கர பகுதிக்குள் ஏறிமறைந்து கொண்டார்  என்பது தொடர்பில்  அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண் டுள்ளனர்.