நேபாளின் காத்­மண்டு நகரில்  நாளை 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய கால்­பந்து சம்­மே­ள­னத்தின் (SAFF) 15 வய­திற்­குட்பட்டவர்­க­ளுக்­கான கால்­பந்து தொடரில் பங்­கேற்கும் இலங்கை அணியை இலங்கை கால்­பந்து சம்­மே­ளனம் வெளி­யிட்­டுள்­ளது.

இந்த அணிக்­கான 30 பேர் கொண்ட வீரர்கள் அணி­யொன்று கடந்த ஜூன் மாதம் தெரிவு செய்­யப்­பட்­டது. 

குறித்த அணியில், கடந்த மார்ச் மாதம் இடம்­பெற்ற தெற்

 கா­சிய – ஜப்பான் 16 வய­திற்கு உட்­பட்ட 4 நாடு­க­ளுக்கிடை­யி­லான போட்டித் தொடரில் இலங்கை அணி யில் அங்கம் வகித்த 10 வீரர்கள் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தனர்.

எனினும், அதில் 8 வீரர்­களே இறுதி அணியில் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர். 

ரவி­குமார் தனுஜன், ஜீவக சமோத், மொஹமட் ரிகாஸ், மொஹமட் ருஸ்கான், மொஹமட் ஆஷிக், நாபீல் நிசாம், சந்­தீப வாஸ் மற்றும் விஷால்க  ஆகி­யோரே குறித்த வீரர்கள்.

இந்த இறுதி அணியில் 3 கோல் காப்­பா­ளர்கள், 7 பின்­கள வீரர்கள், 8 மத்­தி­ய­கள வீரர்கள் மற்றும் 5 முன்­கள வீரர்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இம்­முறை 15 வய­திற்­குட்­பட்ட அணியை நீர்­கொ­ழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்­லூரி வீரர் சன்­தீப வாஸ் தலைமை தாங்­க­வுள்ளார். 

குருணா­கல் மலி­ய­தேவ கல்­லூரி வீரர் ஜீவக சமோத் அணியின் உப தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த அணியில் வட மாகா­ணத்தைச் சேர்ந்த யாழ்ப்­பாணம் தெல்­லிப்­பழை மகா­ஜனாக் கல்­லூரி மாணவன் ரவி­குமார் தனுஜன் மற்றும் யாழ்ப்­பாணம் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி மாணவன் இகினம் டினியாஸ் ஆகி­யோரும் இடம்­பெற்­றுள்­ளனர். 

அதேபோல், கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து ஏறாவூர் அலிகார் தேசிய பாட­சாலை மாணவன் மொஹமட் ரிஹான் அணியில் உள்­வாங்­கப்­பட்­டுள்ளார்.

தென் மாகா­ணத்தில் இருந்து ஷெஹான் பிரயன் மற்றும் ருமேஷ் மெண்டிஸ் ஆகியோ ரும், கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்­லூரி, நீர்­கொ­ழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்­லூரி, கண்டி சில்­வெஸ்டர் கல்­லூரி மற்றும் அநு­ரா­த­புரம் புனித ஜோசப் கல்­லூரி என்­ப­வற்றில் இருந்து தலா இரண்டு வீரர்கள் இந்த அணியில் அங்கம் வகிக்­கின்­றனர்.

போட்டித் தொடரில் குழு ஏ இல் இலங்கை, பங்­க­ளாதேஷ், பூட்டான் ஆகிய அணி­களும் குழு பி இல் இந்­தியா, மாலைத்­தீ­வுகள், நேபாளம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இத்தொடரில் இலங்கை அணி தமது முதல் போட்டியாக நாளை பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது.