10 நீதி­மன்­றங்­களை அமைத்­தா­வது திரு­டர்­களை தண்­டிக்க வேண்டும்.!

Published By: Robert

17 Aug, 2017 | 09:32 AM
image

Image result for சம்­பிக்க ரண­வக்க virakesari

துப்­பாக்­கி­களை காட்டி யாரையும் கட்­டுப்­ப­டுத்தும் அர­சியல் கலா­சாரம்  எமது நல்­லாட்­சியில் இல்லை. சுயா­தீ­ன­மான சட்ட நகர்­வு­களின் மூலமே நல்­லாட்சி அர­சாங்கம் சகல பிரச்­சி­னை­க­ளையும் கையாள்­கின்­றது என பாரிய நகர மற்றும் மேல்­ மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 

ஒரு நீதி­மன்றம் அல்ல பத்து நீதி­மன்­றங்­களை அமைத்­தா­வது திரு­டர்­களை   தண்­டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

பாரிய நகர மற்றும் மேல்­ மா­காண அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர் இந்தக் கருத்­தினை முன்­வைத்தார். 

அவர் மேலும் கூறு­கையில், 

வீதி மறு­சீ­ர­மைப்பு நகர்­வு­களில் நாம் பல்­வேறு முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் செயற்­பட்டு வரு­கின்றோம். பேருந்து போக்­கு­வ­ரத்து தொடர்பில் நேற்றில்  இருந்து நாம் முன்­னெ­டுத்த   நகர்­வுகள் எமக்கு வெற்­றி­ய­ளித்­துள்­ளன. அதேபோல் வீதி சட்­டங்கள் பலப்­ப­டுத்த வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. அதன்­போது வரும் எதிர்ப்­புகள்  அனைத்­தையும் நாம் எதிர்­கொள்ள தயா­ராக உள்ளோம். 

முன்­னைய ஆட்­சியின் போது அதிக நிதி செலவில் வீதி நிர்­மாண  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தனர். ஆனால் நாம் அவ்வா­றான  எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. இதில் கொள்­ளைகள், ஊழல் மோச­டிகள் எதற்கும்  இட­மில்லை. 

துப்­பாக்­கி­களை காட்டி எவ­ரையும் அச்­சு­றுத்­தியோ, கட்­டுப்­ப­டுத்­தியோ நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­ப­ட­வில்லை. நாம் சட்­டத்தின் மூல­மாக மட்­டுமே எமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். முன்னர் துப்­பாக்­கிகள் மட்­டுமே பேசின. அர­சாங்கம் அமை­தி­யாக இருந்­தது. எவரும் கருத்­துக்­களை முன்­வைக்க இட­ம­ளிக்­கவும் இல்லை. அபி­வி­ருத்­தி­களின் பின்­ன­ணியில் இருந்த ஊழல்கள் தொடர்பில் எவரும் கருத்துக் கூற முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. ஆனால்  இன்று   நாம் அனைத்­தையும் மாற்­றி­யுள்ளோம். சட்ட நட­வ­டிக்­கை­களை மக்­க­ளுக்கு நம்­பிக்கை உள்­ளது. அதேபோல் இரா­ணுவம் மற்றும் பொலிஸ் துறை­யினர் தேவை­யான சந்­தர்ப்­பங்­களில் சரி­யாக செயற்­பட்டு வரு­கின்­றனர். 

மேலும் திரு­டர்கள்  தொடர்பில் அர­சாங்கம் மௌனம் காப்­பது சற்று ஏமாற்­ற­மான விட­ய­மாக இருந்­தாலும் கூட விரைவில் சட்ட நகர்­வுகள் பல­ம­டையும். கடந்த கால திரு­டர்கள்  மட்டுமல்ல நிகழ்கால அரசாங்கத்தின் திருடர்களும்   கூட சட்டத்தின் முன்னால்  தண்டிக்கப்படுவார்கள். இவர்களை தண்டிக்க ஒரு நீதிமன்றம் அல்ல பத்து நீதிமன்றங்களையாவது அமைத்து இவர்களைத் தண்டிக்க வேண்டும்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01