2020 இல் மஹிந்தவின் ஆட்சி

Published By: Robert

17 Aug, 2017 | 08:36 AM
image

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையிலான அணி­யினர் ஆட்­சிக்கு வரலாம் என்ற தொனியில்  அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும்   அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன நேற்று கருத்து வெளி­யிட்டார்.  

Image result for ராஜித சேனா­ரட்ன virakesari

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற   வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும்   செய்­தி­யாளர் 

சந்­திப்பில்  ஊட­க­வி­ல­யாளர் ஒருவர் எழுப்­பிய  கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்டார். 

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:-

ஒன்று அல்­லது இரண்டு மேல் நீதி­மன்­றங்­களை  ட்ரயல் அட்பார் நீதி­மன்­றங்­க­ளாக மாற்றி கடந்த ஆட்­சி­யா­ளர்கள் தொடர்­பான  ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை முன்­னெ­டுக்­க­வேண்டும். 

  2020 ஆம் ஆண்டு வரை இதனை இழுத்­த­டிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அப்­படி 2020 ஆம் ஆண்டு வரை  இந்த  விசா­ர­ணைகள் இழுத்­த­டிக்­கப்­பட்டால் அதன்­பின்னர் மஹிந்­த­வுக்கு எதி­ரான  குற்­றச்­சாட்டை  மஹிந்­தவே  விசா­ரணை செய்யும் நிலைமை ஏற்­பட்­டு­வி­டலாம். 

கேள்வி: அப்­ப­டி­யானால் 2020 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு வரலாம் என்று கூறு­கி­றீர்­களா?

பதில்: ஒரு விட­யத்தை நன்­றாகப் புரிந்­து­கொள்­ளுங்கள்,  நாங்கள் ஆட்­சிக்கு வரா­விடின் அவர்­கள்தான் ஆட்­சிக்கு வரு­வார்கள்.  இல்­லா­விடின் ஜே.வி.பி.யால் ஆட்­சிக்கு வர­மு­டி­யுமா? நாம் யதார்த்­தத்­தையும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். 

கேள்வி: மாகா­ண­சபைத் தேர்­தல்­களை  பிற்­போ­டு­வ­தற்கு  அர­சாங்கம்  முயற்­சிப்­ப­தாக குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றது. ?

பதில்: அப்­படி இல்லை மாகா­ண­சபைத் தேர்­தல்­களை  ஒரே தரத்தில் நடத்­த­வேண்டும் என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது.  இது தொடர்பில் நாங்கள் மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருக்­கிறோம். அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றவே முயற்­சிப்போம்.   மாகா­ண­சபைத் தேர்­தலை ஒரே நாளில் நடத்­த­வேண்டும் என்­பதே எமது நோக்கம். குறிப்­பாக  மாகா­ண­சபைத் தேர்­த­லையும் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லையும் ஒரே தினத்தில் நடத்­து­வ­தற்கே ஆராய்­கின்றோம். அதே­போன்று பாரா­ளு­மன்றத் தேர்­த­லையும் ஜனா­தி­பதித் தேர்­த­லையும்   ஒரே தினத்தில் நடத்­து­வ­தற்கு ஆராய்­கின்றோம். 

கேள்வி: இவை எல்­லா­வற்­றுக்கும் முன்னர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை  நடத்­து­வது குறித்து  நீங்கள் கருத்து வெளி­யிட்­டீர்­களா?

பதில்: இந்தத் தேர்­தல்­க­ளுக்கு முன்னர் உண்­மையில்  சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பை நடத்­து­வதே சிறப்­பாக இருக்கும். காரணம்   நான் இது­தொ­டர்பில் ஜனா­தி­ப­தி­யி­டமும் பேசினேன். அவரும்  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு குறித்து ஆரா­ய­வேண்டும் என்று  கூறினார். 

கேள்வி:  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை சுதந்­தி­ரக்­கட்சி எதிர்க்­கின்­றதே?

பதில்: சுதந்­தி­ரக்­கட்சி எதிர்­காது என்றே கரு­து­கின்றேன். சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பை நடத்­து­வதன் மூலம் சுதந்­தி­ரக்­கட்­சிக்கே அதிக நன்மை இருக்கிறது. இன்று சர்வஜன வாக்கெடுப்பை  ஐக்கியதேசியக்கட்சியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் கோரிநிற்கின்றன.  எதிர்ப்பதாயின்  மஹிந்தமட்டுமே  இதனை எதிர்ப்பார். எனவே அனைவரும் விரும்பி நிற்கின்றபோது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே சிறந்ததாக அமையும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47