உலகில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இந்தியாவில் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவி ஒளிபரப்பி வருகின்றது.

குறித்த நிகழ்ச்சி பங்குக்கொண்டு உலக மக்கள் அனைவரின் வரவேற்பினை வெற்ற ஓவியாவிற்கு இலங்கையினை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

பிரேம் ராஜ் இசையமைப்பில் வெளிவந்துள்ள குறித்த பாடலில் யஜீவன்,பிரசாதன் மற்றும் பிரேம்ராஜ் பாடியுள்ள அதேவேளையில் ரமேஸ்காந் மற்றும் எஸ்.ஜி.பிரபு சொல்லிசை பாடியுள்ளனர். 

மேலும் குறித்த பாடலின் வரிகள் பிரவீன் மற்றும் பிரேம் ராஜ் எழுதியுள்ளதோடு, பிரவீனின் ஒளிப்பதிவு மற்றும் கஜனின் வடிவமைப்பில் காணொளி பாடலாக வெளியாகிள்ளது.

இப்பாடல் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.