ரஷ்ய ஜனா­தி­பதி புட்டின் சிறு­வ­னுடன் உட­லு­றவு கொண்டார் என்ற முன்னாள் உள­வா­ளியின் கூற்றால் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது.

ரஷ்­யாவின் உளவு அமைப்­பான கே.ஜி.பி.யின் முன்னாள் அதி­கா­ரி­யான அலெக்­ஸாண்டர் லித்­வி­னென்கோ, லண்­டனில் ஹோட்டல் ஒன்றில் பொலோ­னியம் நச்சு கலந்து தேநீரை பரு­கி­யதன் கார­ண­மாக மர­ண­ம­டைந்தார்.

அவ­ரது மரணம் தொடர்­பாக விசா­ரணை நடத்த ஓய்­வு­பெற்ற நீதி­பதி ராபர்ட் ஓவன் தலை­மையில் குழு அமைக்­கப்­பட்­டது. லித்­வி­னென்­கோவின் மர­ணத்தில் ரஷ்ய ஜனா­தி­பதி புட்­டி­னுக்கு தொடர்பு இருப்­ப­தாக ராபர்ட் ஓவன் அறி­விக்கை தொரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில், புட்டின் சிறு­வ­னுடன் உட­லு­றவில் ஈடு­பட்­ட­தாக லித்­வி­னென்கோ தனது ப்ளாக் இணயப் பக்­கத்தில் எழு­தி­யி­ருந்­த­தாக ராபர்ட் ஓவன் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

லித்­வி­னென்கோ தனது ப்ளாகில் எழு­தி­யுள்­ள­தா­வது, ஆண்ட்­ரோபொவ் கல்­லூ­ரியில் படிப்பை முடித்­ததும் உளவு அமைப்­பான கே.ஜி.பி.யில் சேர புடின் ஆயத்­த­மானர். எனினும், வெளி­நாட்டு புல­னாய்வு பிரிவில் நிய­மிக்­கப்­ப­டாமல் கீழ்­நிலை ஊழி­ய­ரா­கவே அவர் நிய­மிக்­கப்­பட்டார் இதற்கு முக்­கிய காரணம் அவ­ருக்கு சிறு­வர்­க­ளுடன் உறவில் ஈடு­படும் பழக்கம் இருந்­துள்­ளது. பல ஆண்­டு­க­ளுக்கு பின்னர் எப்.எஸ்.பி. உளவு அமைப்பின் இயக்­கு­ந­ராக புட்டின் ஆனார். அப்­போது அவர் ஜனா­தி­பதி

பத­விக்கு ஆயத்­த­மாகி கொண்­டி­ருந்தார். மேலும் தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி தனக்கு எதி­ரான ஆதா­ரங்கள் அனைத்­தையும் அழித்­துள்ளார். சிறுவன் ஒரு­வ­னுடன் புட்டின் உட­லு­றவு கொள்ளும் வீடி­யோவும் அதில் ஒன்று என்று லித்­வி­னென்கொ தனது வலை­த­ளத்தில் எழு­தி­யுள்ளார். இது தொடர்­பாக ராபர்ட் தனது அறிக்­கையில் கூறி­யுள்­ள­தா­வது,

புட்­டி­னுக்கு எதி­ரான லித்­வி­னென்­கொவின் இந்த கூற்று மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒன்று. அவ­ரது மர­ணத்­துக்கும் இந்த கூற்­றுக்கும் தொடர்­பி­ருக்­கலாம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு சிறுவன் ஒருவனின் வயிற்றில் புட்டின் முத்தமிட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.