பாகிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின விழா ; இலங்கையுடனான 2300 வருட தொடர்பை குறிக்கும் புத்தகம் வெளியீடு

Published By: Digital Desk 7

16 Aug, 2017 | 05:15 PM
image

பாகிஸ்தானுக்கான இலங்கையிலுள்ள  உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானுடைய 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையிலான சுமார் 2300 வருட தொடர்பை கொண்டாடும் வகையில் “என் என்டரிங் ஃப்ரென்டஸிப் : ஸ்ரீ லங்கா என்ட் பாகிஸ்தான்”  ( An Enduring Friendship; Sri Lanka and Pakistan ) எனும் புத்தகத்தை  நேற்று வெளியிட்டது.

இந் நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஸர்ப்ராஸ் அஹமட் கான் ஸிப்ரா,

பாகிஸ்தான் மற்றும் இலங்கையானது சமுத்திர தொடர்புடையது எனவும் இத் தொடர்பானது ஏறத்தாழ 2300 வருட பழைமையானதெனவும் 1948 இல் பாகிஸ்தான் சுதந்திரமடைந்ததன் பின்னர் அப்போதைய இலங்கை பிரதமர் டி.எஸ் சேனாநாயக்கவின் பாகிஸ்தானுக்கான விஜயத்தின் பின்னர் புதுப்பிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

மேலும் புத்தகத்தின் ஆசிரியரான அர்ஷாட் காஸிம் தனது உரையில்,

இப் புத்தகமானது இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு, இராணுவ ஆக்கிரமிப்பு தலையீடு இல்லாத சுமுகமான உறவு முறை மற்றும் ஆரம்பகால தொடர்பு அது வளர்ச்சி அடைந்த விதம் என பல தகவல்களை சுமந்துள்ளது என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஜயசூரியவும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பாண்டாரநாயக்க குமாரதுங்க,  மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ரிஷாட் பதியுதீன், தயா கமகே, எ.எச்.எம் பௌஷி, எம.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ், அனோமா கமகே, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு புத்தகத்தின் பிரதிகளையும் பெற்றுக் கொண்டனர்.

இந் நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் தேசிய கீதங்கள் தேசிய கலாசாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் ஒலிபரப்பப்பட்டமையானது அனைவரினதும் பாராட்டைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01