இலங்கை பணி­யா­ளர்­க­ளுக்கு கட்­டாரில் தொழில் உரிமை மீறல்

Published By: Priyatharshan

16 Aug, 2017 | 10:31 AM
image

கட்­டாரில் எதிர்­வரும் 2022 ஆம் ஆண்டில் சர்­வ­தேச உதை­பந்­தாட்ட  உலக கிண்ண போட்­டிகள் இடம்­பெ­ற­வுள்­ளன. இதற்­காக கட்­டாரில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற கட்­டு­மான அபி­வி­ருத்தி பணி­க­ளுக்கு சுமார் 2 மில்­லியன் பணி­யா­ளர்கள் இருத்­தப்­பட்­டுள்­ளனர். இதற்­கான  மனித வளத்தை  ஆசிய நாடு­களில் இருந்தும் ஆபி­ரிக்க பிராந்­திய நாடு­களில் இருந்தும் கட்டார் பெற்றுக் கொண்­டுள்­ள­தாக மனித உரி­மை­க­ளுக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான நிலை­யத்தின் பணிப்­பாளர் சட்­ட­த்த­ரணி கே.எஸ். ரத்­னவேல் தெரி­வித்தார். 

கொழும்பு 7 இல் அமைந்­துள்ள தொழில்சார் நிபு­ணர்­களின் அமைப்பின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார். 

அவர்  தொடர்ந்தும் கூறு­கையில்,

இலங்­கையை சேர்ந்த   சுமார் 85 ஆயிரம் பேர் வரை கட்­டாரில் பணி­யா­ளர்­க­ளாக உள்­ளனர். இதில் 23 ஆயிரம் பேர் தெற்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்­துள்­ளனர். இவர்­களின் தொழில் உரி­மைகள் கட்­டாரில் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. ஒப்­பந்­தத்­திற்கு அப்­பாற்­பட்ட தொழில்­களில் ஈடு­ப­டுத்தல் , உரிய சம்­பளம் வழங்­காமை மற்றும் வேலை மணித்­தி­யா­லங்கள் உள்­ளிட்ட அனைத்து அடிப்­படை வச­தி­க­ளிலும் பாரிய நெருக்­க­டி­களே ஏற்­பட்­டுள்­ளன.

பாதிக்­கப்­பட்ட இலங்கை தொழி­லா­ளிகள் அந்­நாட்டு ஊழியர் நலன் அமைப்­பு­க­ளுக்கு சென்­றாலும் நீதி கிடைப்­ப­தில்லை. எனவே சர்­வ­தேச  தொழில் சட்­டங்கள் குறித்து பல்­வேறு சர்ச்சை நிலை தற்­போது கட்­டாரில் ஏற்­பட்­டுள்­ளது.  கட்­டா­ருக்கு எதி­ராக பல்­வேறு நாடு­களை சார்ந்த சிவில் அமைப்­புகள் சர்­வ­தேச தொழில் தாப­னத்­திடம் முறை­யிட்­டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்­வ­தற்கு எதிர்­வரும் நவம்­பரில் ஆணைக்­குழு ஒன்றை ஸ்தாபிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

எனவே இலங்கை அர­சாங்கம் இந்த விட­யத்தை கவ­னத்தில் கொண்டு கட்­டாரில் பணி­பு­ரியும் எமது பணி­யா­ளர்­களின் உரி­மை­க­ளுக்­காக பணி­யாற்ற வேண்டும். கட்டார் நாட்டில் புலம்­பெயர் பணி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான உரிமை மீறல்­களை விசா­ரணை செய்­வ­தற்கு ஒரு விசா­ரணை ஆணைக்­கு­ழுவை  அமைப்­ப­தற்கு வலி­யு­றுத்­து­கின்றோம் .  கட்­டாரில் இடம்­பெற்ற புலம்­பெயர் பணி­யா­ளர்கள் மீதான உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்கு ஆணைக்கு குழு அமைக்க உள்ள சர்­வ­தேச தொழில் தாப­னத்­திற்கு இலங்கை அலு­வ­ல­கமும் பங்­க­ளிப்­பு­களை செய்து நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்த வேண்டும். சர்­வ­தேச நியமங்களுக்கு இணங்கி, இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விசார ணையை மேற்கொள்வதற்கு சுயாதீன  ஆணைக்குழு அமைக்கும் வரை கட்டாருக்கு பணியாட்களை அனுப்பு வதை இலங்கை நிறுத்த வேண்டும். இந்த விடயங்களை பரிந்துரைகளாக முன் வைக்கின்றோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19