எமது சிங்கங்கள் மீது மன உறுதி வைத்துள்ளேன். இலங்கையர்கள் அனைவரும் பொறுமையுடனும் மன உறுதியுடனும் இருக்குமாறு இலங்கை அணியின் ஒருநாள் அணித் தலைவர் உபுல் தரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உபுல் தரங்க மேலும் தெரிவிக்கையில்,

கிரிக்கெட்டில் எந்த வகையில் திறமையாக இருந்தாலும் ஒவ்வொரு தேசிய அணிக்கும் எமக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைப்போல மாறிமாறி ஒரு சுற்றுவட்டப்பதையில் இவ்வாறான நிலைமையேற்படும்.

கடந்த 18 வருடங்களில் இலங்கை அணி 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் திறமையாக செயற்பட்டிருந்தது. தற்போது நாம் பயணிக்கும் கடினமான பாதையில் அதனை எவரும் மறந்துவிடமுடியாது.

நாம் ஒரு சில விடயங்களை மனந்திறந்து பேசிவிட முடியாது. அவ்வாறான விடயங்களை பொறிமுறைகளை பயன்படுத்தியே நிவர்த்திசெய்ய முடியும். 

எவ்வாறு இருப்பினும் இலங்கை ரசிகர்கள் அனைவரும் எமது அணி மீது நம்பிக்கை வையுங்கள். மீண்டும் எமது அணி சாதிப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் பக்கபலமாக இருக்குமாறு இலங்கை அணியின் ஒருநாள் தலைவர் உபுல் தரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.