சுமணரத்ன தேரர் தலைமையில் வேலிகளை கழற்ற முற்பட்ட பொதுமக்கள் : பொலிஸார் தடியடி

Published By: Priyatharshan

16 Aug, 2017 | 05:39 AM
image

மட்டக்களப்பு, வாழசைச்சேனை, முறாவோடை பாடசாலை மைதானத்தை அத்துமீறி அபகரித்து குடிசை அமைத்துள்ளதை அகற்ற மட்டக்களப்பு சிங்கள-தமிழ் இனத்தின் விழிபு;புணர்வுக்கான அமைப்பின் தலைவர்  மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையிலான தமிழ், சிங்கள பொதுமக்கள் அதனை நேற்று செவ்வாய்க்கிழமை மைதானத்தை முற்றுகையிட்டதையடுத்து அங்கு பெரும்பதற்றம் நிலவியது.

மட்டக்களப்பு பிள்ளையாரடி ஆலயத்தில் மத நல்லிணக்கத்திற்காக விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் அங்கு மட்டக்களப்பில் இடம்பெறும் காணி அபகரிப்பிற்கும் முறாவோடை பாடசாலை மைதான அபகரிப்பிற்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த பாடசாலைக்கு சென்று, அங்கு அமைக்கப்பட்ட வேலிகளை கழற்றமுற்பட்டனர். 

இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிசாருக்கம் ஆர்பாட்டகாரர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன் ஆர்பாட்டகாரர்கள் அதனையம் மீறி வேலியை கழற்ற முற்பட்டனர். 

இதனையடுத்து பொலிசார் அவர்கள் மீது தடியடிபிரயோகம் செய்தனர். இதில் பெண்கள் உட்பட 4 பேர் காயடைந்தனர்.

இதேவேளை பொலிசார் மீது ஆர்பாட்டகாரர்கள் கல்விச்சு நடாத்தியதையடுத்து பொலிசார் புகைக்குண்டுகள் வீசி ஆர்பாட்டகாரர்களை கலைத்தனர் இதனையடுத்து அங்கு சில மணிநேரம் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

இதனையடுத்து அங்கு மேலதிகமாக கலகம் அடக்கம் பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், கிழக்குமாகாண காணி ஆiணையாளர் வருகை தந்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த காணி பாடசாலைக்குரியது எனவும் இது தொடர்பாக இன்று புதன்கிழமை காலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர், பொலிசார், காணி ஆணையாளர், பிரதேச செயலாளர், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதுடன் அதில் தீர்வை பெற்றத் தருவதாகவும் பாடசாலை மைதானத்திற்கு வரைபடத்தில் உள்ள காணியில் ஒரு அங்குலம் கூடவிடாது அதனை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35