பதிவுசெய்யப்படாத வைத்தியசாலை சுற்றிவளைப்பு

Published By: Digital Desk 7

15 Aug, 2017 | 04:47 PM
image

வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் சென்ற குழுவினர் அதிரடியாக சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியசாலை சில காலமாக வவுனியாவில் இயங்கி வந்த நிலையில் சுகாதாரப் பரிசோதகர்களால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன் மருந்துப்பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சுற்றிவளைப்பு குறித்து  வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் கருத்து தெரிவிக்கையில்,

 குறித்த வைத்தியசாலையானது எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை.  இந்த மருந்து வகைகள் எவ்வாறானவை என்று தெரியவில்லை. அதன் காரணமாக மருந்துகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் மருந்துகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது என குறிப்பிட்டார்.

குறித்த வைத்தியசாலையின் மருத்துவர் கே.கோகுல்ராஜ் கருத்து தெரிவிக்கையில்,

எனது வைத்தியசாலை ஹோமியோபதி  வைத்திய நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க வர்த்தமானியில் பெயர் இருப்பதாக குறிப்பிட்ட வைத்தியர் கிளிநொச்சி மற்றும் குருநாகல் போன்ற பகுதிகளில் தங்கள்  ஹோமியோபதி  வைத்தியசாலை இயங்கிவருவதாகவும் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33