வரலாற்றில் என்றுமில்லாதவாறு மழை : வெள்ளத்தில் மூழ்கியது மடு திருத்தலம் : யாத்திரீகர்கள் திரும்புகின்றனர்

Published By: Priyatharshan

14 Aug, 2017 | 08:04 PM
image

வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடும் மழை பெய்து வருவதால் மடு அன்னையின் திருவிழாவை வழக்கமான முறையில் கொண்டாட முடியாதவாறு தடைப்பட்டுள்ளது.

நாட்டின் நாலாபுறமும் இருந்து வந்த யாத்திரீகர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

மடு திருத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் யாத்திரீகர்கள் தற்காலிகமாக அமைந்து தங்கியிருந்த கூடாரங்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற  இருந்த வழிபாடு நிறுத்தப்பட்டு பிரதான ஆலயத்தில் 4.30 மணிக்கு திருச்செபமாலையின் இரு காரணிக்கங்கள் செபிக்கப்பட்டு, மடு அன்னைக்கு யாத்திரீகர்களால் பிரியாவிடை செபம் சொல்லப்பட்டு மரியன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் வழிபாடுகள் நிறைவடைந்தது. 

இதேவேளை, ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் தொடர்ந்தும் மடுத்திருப்பதியில் தங்கியிருப்பதற்கு  காலநிலை ஏதுவாக அமையாத காரணத்தால் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரின் தலைமையில் கூடிய குருக்கள் குழு, தொடர்ந்து கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் திருவிழா திருப்பலி ஆலயத்திற்குள் இடம்பெறுமென தீர்மானித்தது.

இதையடுத்து திருவிழாவில் கலந்துகொள்ள வந்திருந்த ஏராளமான யாத்திரீகர்கள் தமது இருப்பிடங்களை நோக்கி திரும்புவதை அவதானிக்க முடிந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46