ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்வரும் செப்டம்பர் மாதம் அமெ­ரிக்­கா­வுக்கு விஜ­யம் மேற்­கொள்­ள­வுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை கூட்­டத்தின் 72 ஆவது அமர்வு செப்டம்பர் 12ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. 

குறித்த கூட்டத்தொடரில், 19 ஆம் திகதி ஜனாதிபதி கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர், அவர் கலந்து கொள்ளும் 3வது சந்தர்ப்பம் இதுவாகும். 

இந்த நிலையில், ஜனாதிபதி சில முக்கிய அரச தலைவர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.