பதுளை மாகாண வைத்தியசாலை பல் சிகிச்சைப் பிரிவில் பல் நோயாளிகளின் வழி காட்டலுக்காக மும் மொழிகளிலும் தொங்க விடப்பட்டுள்ள பலகையில் தமிழ் மொழி படு கொலை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பல்லின சமுதாய நாடான இலங்கையில் தமிழ் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரச பொது இடங்களில் இவ்வாறு தமிழ் மொழியானது படுகொலை செய்யப்பட்டுள்ளமையானது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்க விடயமுமாகும்.

இங்கு மட்டுமல்ல நாடளாவிய ரீதியில் வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பலகைகளில் தமிழ் மொழியானது படுகொலை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் அதிகாரிகள் இது குறித்து எதுவித நடவடிக்கைகள் எடுக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.