இலங்­கையின் தேசிய ஒலிம்பிக் குழு நடத்­திய ஒலிம்பிக் பெறு­மதி கல்வித் திட்டம் சார்ந்த பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான முன்­னோடி விவாதப் போட்­டியில் கண்டி மஹ­மாயா கல்­லூரி சம்­பியன் பட்­டத்தை வென்­றெ­டுத்­தது. 

இதன் மூலம் சம்­பி­ய­னான மஹ­மாயா கல்­லூ­ரியின் மூன்று மாண­விகள், தேசிய ஒலிம்பிக் குழுவின் பூரண அனு­ச­ர­ணை­யுடன் ஒலிம்­பிக்கின் பிறப்­பி­ட­மான ஒலிம்­பி­யா­வுக்கு செல்லும் அரிய வாய்ப்பைப் பெற்­றுள்­ளனர்.

சம்­பி­ய­னான மஹ­மாயா கல்­லூரி அணியில் அபூர்வா ஏக்­க­நா­யக்க (தலைவி), சாரா பெரேரா, தினலி ரத்­நா­யக்க ஆகியோர் அங்கம் வகித்­தனர். பதில் மாண­வி­யாக ஜயனி ஹேரத் இடம்­பெற்றார்.

இரண்டாம் இடத்தைப் பெற்ற கொழும்பு சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க வித்­தி­யா­லய அணியில் எனூரி வீர­சிங்க, ருவின்யா வீரக்கோன், ரோசாரா தயா­ரட்ன ஆகியோர் இடம்­பெற்­றனர். 

கொழும்பு மாவட்­டத்­தி­லி­ருந்தும் கண்டி மாவட்­டத்­தி­லி­ருந்தும் தலா பத்து பாட­சா­லைகள் வீதம் பங்­கு­பற்­றிய முன்­னோடி விவாதப் போட்டி தகு­திகாண் சுற்று, முதல் சுற்று, கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்று, இறுதிச் சுற்று என நான்கு கட்­டங்­க­ளாக நடத்­தப்­பட்­டன. 

இந்த ஒவ்­வொரு சுற்று விவா­தத்­திலும் பங்­கு­பற்­றிய கல்­லூ­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ஒவ்­வொரு தலைப்பின் அடிப்­ப­டையில் மாண­வர்கள் தங்­க­ளது வாதங்­களை முக்­கிய ஆதா­ரங்­க­ளுடன் முன்­வைத்­தனர். ஒலிம்பிக் வர­லாற்றில் பலர் அறிந்­தி­ராத விட­யங்­களை இந்த மாண­வர்கள் தங்­க­ளது விவாதத் திறன் மூலம் வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வந்து வியக்­க­வைத்­தனர்.

உண்­மையில் இதனை விவாதக் களம் என்று சொல்­வ­தை­விட கற்­பித்­த­லுக்­கான ஒரு களம் என்று கூறலாம். 

ஒலிம்பிக் கல்­விசார் பெறு­ம­தி­க­ளான முயற்­சியின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி, நேர்த்­தி­யான விளை­யாட்டு, பிறரை மதித்தல், திறமை மீது நாட்டம் கொள்­ளுதல், உடல், உள்ளம், ஆர்வம் ஆகி­ய­வற்­றுக்கு இடையில் சம­நி­லையைப் பேணுதல் ஆகி­ய­வற்றை ஊக்­கு­விப்­பதே இந் நிகழ்ச்­சியின் பிர­தான நோக்­க­மாக அமைந்­தி­ருந்­தது.

வெற்றி பெறு­வ­தை­விட பங்­கு­பற்­று­தலே சிறப்பு என்ற ஒலிம்பிக் கோட்­பாட்டைத் தாரக மந்­தி­ர­மாகக் கொண்டு மாண­வர்கள் விவாத நிகழ்ச்­சியில் பங்­கு­ பற்­றி­யதன் மூலம் அவர்கள் ஒலிம்பிக் பெறு­ம­தி­களை நன்கு உணர்ந்­து­கொண்­டார்கள் என்­பது தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த நிகழ்ச்சி தொடர்­பாக கருத்து வெளி­யிட்ட தேசிய ஒலிம்பிக் குழு செய­லாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, ‘‘இந்தத் திட்­டத்தை ஆறு வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஆரம்­பித்தோம். இந்தத் திட்­டத்தில் பங்­கு­கொண்ட பாட­சாலை மாண­வர்கள் எமது சிறப்புத் தூது­வர்­க­ளாவர்.  இந்து, முஸ்லிம், கிறிஸ்­தவம், பௌத்தம் ஆகிய சகல மதங்­க­ளையும் தமிழ், சிங்­களம் ஆகிய மொழி­க­ளையும் சேர்ந்த பாட­சா­லைகள் இந் நிகழ்ச்­சியில் பங்­கு­கொள்ள முன்­வந்­தமை பாராட்­டுக்­கு­ரி­யது’’ என்றார்.

ஒலிம்பிக் பெறு­ம­திகள் தொடர்­பாக பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் விவாத நிகழ்ச்சி ஒன்று முழு உல­கி­லேயே இலங்­கையில் தான் முதல் தட­வை­யாக நடத்­தப்­பட்­டுள்­ளது.

‘‘உல­கி­லேயே முதல் ­த­ட­வை­யாக நடத்­தப்­பட்ட இந்த விவாத நிகழ்ச்சி நாங்கள் நினைத்­த­தை­விட வெற்­றி­க­ர­மாக நிறை­வே­றி­யது. விவா­தத்தில் பங்­கு­பற்­றிய மாணவ, மாண­விகள் மிகுந்த ஈடு­பாட்­டுடன் வர­லா­று­களைத் திரட்டி தத்தமது வாதங்களை எடுத்துரைத்தனர். இதன் மூலம் அவர்களது வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையும் என நம்பு கின்றேன். இந்த நிகழ்ச்சியை சகல மாவட்டங்களிலும் நடத்தி மக்களின் வாழ்க்கையை செழுமையாக்க வேண் டும் என்பதே எமது நோக்கமாகும்’’ என மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.