புகை­பி­டிக்­கா­த­வர்கள் மத்­தியில் நுரை­யீரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்கள்  தொகை  கடந்த  ஒரு தசாப்த காலத்தில் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்ள  நிலையில் அதற்கு வளி­மண்­டல   மாச­டை­தலே காரணம் என நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பிரித்­தா­னி­யாவின் மிகப் பெரிய புற்­றுநோய் அறுவைச் சிகிச்சை நிலை­ய­மான லண்டன் புரொம்டன் மருத்­து­வ­ம­னையால்   தேசிய மட்­டத்தில்  இந்­த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

அதற்கு முன்னர்  நுரை­யீரல் புற்­று­நோய்க்கு பத்தில் ஒன்­பது  பங்கிற்கு கார­ண­மாக புகைத்தல் விளங்­கி­யது. 

ஆனால் தற்­போது புகை பிடிப்­ப­வர்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்ள நிலையில்  புகை­பி­டிக்­கா­த­வர்கள் மத்­தி­யி­லான  நுரை­யீரல் புற்­றுநோய்  கடந்த  ஒரு தசாப்த காலத்தில் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளமை நிபு­ணர்­களை வியப்பில் ஆழ்த்­தி­யி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட  ஆய்வில் வளி மாச­டை­தலே  புகைக்­கா­த­வர்கள் மத்­தி­யி­லான  நுரை­யீரல் புற்­றுநோய் அதி­க­ரிப்­புக்கு காரணம் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அதே­ச­மயம் சீனா­வி­லுள்ள முக்­கிய நக­ரங்­களில் கடந்த 10 – -15  வருட  காலப் பகு­தியில் நுரையீரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்கள் தொகை பெரிதும் அதி­க­ரித்த­தற்கு  வளி­மண்­டல மாசாக்­கத்­துடன் கூடிய பனிப் புகையே காரணம் என  குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.